எத்தனையோ பேர்கள் தியான வழிபாடு யோகா முறைகளை சொன்னாலும், எழுதினாலும்,தியான வழிபாடு முறைகளை நேரடியாக அதன் சூட்சமமான ரகசியங்களை யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை.அதிலும் சுயநலம்.
தியானப் பயிற்சிக்காக எதையும் விட வேண்டியதில்லை.
எதையெல்லாம் வாழ்க்கையில் விட வேண்டுமோ அதை எல்லாம் சொல்லி சுற்றி வளைத்து கடைசியாக சொல்லவந்ததை மிகச் சுருக்கமாக சொல்லியிருப்பார்கள்.
தியானப்பயிற்சி செய்வதன் மூலம் எதையெல்லாம் விட வேண்டுமோ அதெல்லாம் தானாகவே விலகிவிடும்.தியானம் செய்பவரின் குறிக்கோள் தொடர்ந்து தியானம் செய்து வர வேண்டும் என்பதே.தொடர்ந்து தியான பயிற்சி செய்வதன் பயனாக, மது அருந்துதல்,புலால் உண்ணல்.
பொய்,பொறாமை,புறசொல்லுதல்,காம குரோதங்கள் மற்றும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடைகளாக இருப்பவை என, தேவை இல்லாத பலவிஷயங்கள் தானாகவே விலகிவிடும். அதற்காக நாம் தனியாக முயற்சி எதுவும் செய்ய வேண்டியதில்லை. அதற்காக கால விரயமும் செய்ய வேண்டியதில்லை.
கல்வி, நீதி, மந்திரம், வேதங்கள், உபநிஷதங்கள், ஜோதிடம், மாந்திரீகம், அறிவியல் இப்படி எத்தனையோ நூல்கள் வெளி வந்தாலும், வாங்கி படித்தவர்கள் அத்தனைபேரும் நூலின் தன்மைக்கு மாறப்போவது இல்லை.
ஒரு சிலர் மட்டுமே ஆழ்ந்து படித்து உணர்ந்து கொள்கிறார்கள். மற்றவர்களால் ஏன் முடியவில்லை.
ஜோதிட நூல்களை எத்தனையோ பேர்கள் படிக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் ஜோதிடர் ஆவதில்லை.எந்த நூலைப் படித்தாலும் அதன் அடிப்படைகளை மட்டுமே படிப்பவர்களினால் அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் படிக்க…..
தியானப் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்?
முழுமையாக அறிந்து கொள்ள முடியாத்தின் காரணம், ஆழ்ந்து உணர்ந்து நினைவாற்றலுடன், உற்சாகமாக படிக்காததன் விளைவே.
புராண இதிகாச காலங்களில் இருததாக சொல்லப்பட்ட புஷ்பக விமானத்தின் செயல்முறைகள் இன்று வரை யாருக்கும் தெரியாது.
புராணங்களில் படித்திருக்கிறோம், தேவர்கள் பயன்படுத்திய விமானம், புஷ்பக விமானம். அது நினைத்து இடத்தில் இறங்கும், அப்படியே மேலெழும்பி பறக்கும், ஒரே இடத்தில் மேலே நிலையாகவும் நிற்கும்.
புராணங்களில் சொல்லப்பட்டதைப் போன்று இன்று ஹெலிகாப்டர் என்னும் சிறிய விமானத்தை நாம் பார்க்கிறோம். இது எப்படி சாத்தியமானது. எந்தெந்த காலத்தில் யாரால் எதைப்பற்றிய ரகசியங்கள் வெளிப்பட வேண்டுமோ அது அந்த மனிதரால் வெளிப்படும்.
இது இறைவனின் திருஉள்ளம். ஒருவர் ஜோதிடம் சொல்ல வேண்டும் என்றால் அவருடைய ஜாதகத்தில் கிரக அமைப்புகள் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கிரக அமைப்புகளால் மட்டுமே ஒருவர் இன்ன கர்மங்களைச் செய்ய முடியும் என்ற நியதியுடன் பூர்வ ஜென்ம புண்ணியங்களால் பிறந்து, மறைந்தும், அறியாமலும், இருக்கும் ரகசியங்களை மீண்டும் இறைவன் அருளால் வெளிப்பதுகிறான்.
எந்த கலையாக இருந்தாலும் அதன் நூட்பங்களையும், ரகசியங்களையும், ஆரம்ப நிலை பயிற்சியில் சொல்லி புரியவைத்து அதன் பின் பயிர்களைத் தொடர்வார்கள்.அடிப்படைப் பயற்சின் போது மற்ற விஷயங்களை தெளிவாக்குவரர்கள்.
முன் சொன்ன நுட்பமான ரகசியங்களை பயிற்சியில் முழுமை பெரும் வரை யார் ஒருவர் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்கிறாரோ அவரே பயிற்சியில் முதன்மை நிலையில் இருப்பார். நுட்பங்களை மறந்தவர், பயிற்சியில் முழுமை அடைவதில்லை.
நுட்பங்களை அறிந்து கொள்ளும் ஞானமும், சுயமாக சிந்திக்கும் ஆற்றலும் அறிவும் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதை தொடந்து பயன்படுத்த வேண்டும். தீவிர சிந்தனையே பரந்த அறிவை வளர்க்கும்.
எந்த ஒரு நூலையும் ஆழ்ந்து படிக்கும் போது தான் அதனுள் இருக்கும் நுட்பங்களை புரிந்து கொள்ள முடியும்.
தியான யோக வழிபாடு முறை
எவ்வளவு எளிமையாக எழுதினாலும் சொன்னாலும் படிப்பவர்கள், கேட்பவர்கள் மனம் சிந்தனை செய்வதில்லை. எவ்வளவு எளிமையாக இருந்தாலும் அதிலும் குறை உள்ளதாகப் புரியாமல் நினைக்கிறார்கள்.
சிறந்த உணவு வகைகளை ருசித்து சாப்பிடுறோம். சாப்பிடும் முன் இனத்தை இப்படி எல்லாம் சாப்பிட வேண்டும் என்ற மன முன்னோட்டம் அனைவர் மனதிலும் உள்ளது. சாப்பிடும் உணவு வகைகளின் வாசனைகளை முகரும் போதே அதன் சுவையை பிரித்து அறிகிறான். இதுவே ஒரு ஞானம் தான்.
ஒருவன் தனக்கு தேவையான ஆடைகளை, அதன் தன்மைகளை அறிந்து தேர்ந்தெடுக்கிறான்.எதையோ ஒன்றை வாங்கிக்கொண்டு வருவதில்லை. தனக்குள் இருக்கும் ஞானத்தை ஒரு சாதாரண விஷயத்திற்கு மட்டும் பயன்படுத்துகிறான்.
இதே ஞானத்தை தான் ஆற்றலை ஒரு நூலைப்படிக்கும் போது பயன்படுத்துவானாகில், சாதாரண மனிதனின், அறிவிலிருந்து மேம்பட்டு தனித்தன்மையுடன் விளங்குவான்.தேவையில்லாத விஷயத்திற்காக சிந்திக்க மனமில்லாமல் சிந்திப்பதே ஒரு பெரும் சுமையாக நினைக்கிறார்கள்.
சிந்தனைக்கும் கற்பனைக்கும் யாரும் விலை கொடுக்க வேண்டியதில்லை. சாதாரண மன ஓட்டம் தான். இதனால் யாருக்கும் எந்த சிரமமும் வராது. உயர்களிலேயே தன் சிந்தனைகளை வெளிப்படுத்துவது மனிதன் ஒருவன் தான்.
தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள எத்தனையே விதமான கற்பனைகளால் ஒத்திகை பார்த்துக் கொள்கிறான். அதுவும் ஞானம் சம்பந்தப்பட்டதே.
ஞானம் இரண்டு வகைகளாக செயல்படுகிறது.
ஒன்று உள் உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஞானம், மற்றொன்று புற உணர்வுகள் புரிந்து கொள்ளும் ஞானம் ,சிந்தனை, கற்பனை,தன்னை அறியும் அறிவு உள் உணர்வு என்றும் செயல்படுகிறது. நிகழ்காலம், எதிர்காலம், வாழும் வாழ்க்கை முறை போன்ற மிக அவசியமானதை நிர்ணயம் செய்யும் ஞானம் புற உணர்வுகளாக செயல்படுகிறது. இப்படி எல்லாவற்றையும் முறைப்படுத்தும் ஞானம் நம்முள்ளே தான் இருக்கிறது.
தேவையானதை ஏற்றுக்கொள்ளும் ஞானமும், தேவையில்லாத்தை ஒதுக்கி வைக்கும் ஞானமும் நம்முள்ளே தான் இருக்கிறது. செலவச் சீனமானாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் இறுதியில் சாம்பலாகி, மண்ணோடு மண்ணாகி மண்ணில் கலக்கப் போகிறவர்கள்தான்.
இந்த உடம்பையும் மனதையும் இயக்கிய உயிர் மூச்சுக்காற்று வெளியேறிவிடும். இந்த உலக வாழ்க்கையின் பந்தங்களிலிருந்து விடுபடப்போகிறோம் என்பதை நாம் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மை நிலைகளை சிந்தித்தல் உள் உணர்வுகளாக செயல்படுகிறது ஞானம்.
மேலும் படிக்க…..
எந்த ஒரு செயலையும் இறைத் தொண்டாகச் செய்து வாழ்க்கையில் தன கடமைகளை சிறப்பாக செய்து, பிரார்த்தனையின் மூலம் சாதனைகளை செய்வது புற ஞானம்.
ஞானத்தைத் தேடி வெளியே எங்கேயும் போக வேண்டியதில்லை.
நாம் தேடும் பொருள் நம்மிடமே உள்ளது. மொழி தெரியாத ஊரிலே நாம் பேசுவது அவர்களுக்கும் புரியாது. அவர்கள் பேசுவது நமக்கும் புரியாது. இருந்தாலும் எப்படி சமாளித்து ஊர் திரும்புகிறோம்.
ஒரு விஷயத்தை புரியவைக்க நம் மனோசக்தியைப் பயன்படுத்துகிறோம்.நம்மை அறியாமலே எப்படியாவது புரியவைத்தால் போதும் என்ற நிலையில் மொழி தெரியாது என்ற காரணத்தினால் நம்மை அறியாமலே தீவிரமான மனோ சக்தியை பயன்படுத்தி நாம் நினைத்ததை புரியவைத்துவிடுவோம். ஒரு நூலைப்படிக்கும் போதும் இதே மனோபாவத்தை கடைபிடிக்க வேண்டும்.
கல்வி படித்தவன் எப்படிப்பட்ட வேலை தனக்கு கிடக்க வேண்டும் என்ற கற்பனை, எதிர்காலத்தில் எதை எல்லாம் சாதிக்க வேண்டும் என்ற கற்பனை, எதிர்காலத்தில் எதை எல்லாம் சாதிக்க வேண்டும் என்ற கற்பனை, தன் திருமணம், வரக்கூடிய மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை வாழ்க்கையில் எப்படிப்பட்ட இலட்சியங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற கற்பனை, இப்படி வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கும் மட்டும் கற்பனை வளம் மடைதிறந்த வெள்ளம் போல் வரும்.
வாழ்க்கை, சமூகம், பக்தி, கலாச்சாரம்,பண்பாடு என எல்லாவற்றிற்கும் நமக்குள் இருக்கும் ஞானம் சரியான வழியை காட்டுகிறது. எதிலும் சுயநலம் பார்க்கும் மனதை நல்ல நூல்கள் படிக்கும் விஷயத்தில் பயன்படுத்தினால் அறிவில் நல்ல தெளிவு உண்டாக்கும்.( இதையும் சுயநலத்திற்காகவே செய்யுங்கள்) நேரம் இல்லை என்று தவித்துவிடும் எண்ணத்தை முதலில் விட்டு விடுங்கள்.
உண்மையைச் சொல்வது என்பது கத்தி முனையில் நிற்பதைப் போன்றது.
இரு சிறுவர்கள் ஒரு ஆமையை பிடித்து, ஆமையின் முதுகில் கல்லால் அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப்பக்கமாக வந்த மகான் ஒருவர் சிறுவர்களைப் பார்த்து ஆமையை என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்.
எத்தனை முறை கல்லால் அடித்தும் ஆமை சாகவில்லை என்றும், இதை எப்படி கொல்வதென்று சிறுவர்கள் மகானிடம் கேட்டனர். மகானுக்கு பெரிய தர்மசங்கடம்.
உண்மையைச் சொன்னால் ஒரு உயிர் பறிபோகும். உண்மையை மறைத்தால், உண்மையை மறைந்த பாவம் தன்னைச் சேரும்.(ஆமையை அதன் ஓடு தரையில் படும்படி திருப்பி வைத்தால் இறந்துவிடும்) மகான், ஆமையை ஆற்று நீரில் முதுகு படும்படி போடுங்கள் என்றார், நீரில் ஆமை தப்பிவிடும், மகானுக்கு உண்மையை சொன்ன மனத்திருப்தி.
நல்லவன் ஒரு தீயசெயலைச் செய்தாலும் அதன் முடிவில் மற்றவர்களுக்கு நம்மை உண்டாகும். சுயநலக்காரன் எத்தனை ஆயிரம் நற்செயல்கள் செய்தலும் , முடிவில் பெருத்த தீமையே தரும்.
எத்தனையோ பேர்கள் குறைகள் சொல்லலாம், நிறைவுகளைச் சொல்லலாம்,ஆனால் குறை சொல்பவர்கள் குறைகளை மட்டுமே சொல்வார்கள், தான் அறிந்த மட்டில் உண்மையைச் சொல்லி குறைகளை நிவர்த்தி செய்யும்.
ஆலோசனையை சொல்லமாட்டார்கள். எதற்கும் சம்பந்தம் இல்லாத கருத்தைச் சொல்வார்கள். அதனால் யாருக்கும் எந்த விதமான பிரயோசனமும் இல்லை.
கற்றவனே ஆயினும் குறைகளைச் சொல்லும் போது ஆணித்தரமாக இதுதான் சரியான வழி என்பதையும் சொல்லமாட்டார்கள். நழுவலாகவே பதில் சொல்வார்கள், அப்படிப்பட்டவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் ,தான் சொல்லும் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், கல்வி, கற்பனை வளம், ஞானம், இருப்பவர்கள் அடுத்தவன் கருத்தையும் யோசிக்க வேண்டும்.
தான் அறிந்து கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக பேசமாட்டார்கள் வெளிப்படையாக பேசுவதிலும் அவர்களுக்கும் தன்னமிக்கை கிடையாது, சொல்லும் கருத்து சரியானதா, தவறானதா என்பதை நிர்ணயிக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள்.
நிலையற்ற மனத்தினை உடையவர்கள்.
இவர்களால் மற்றவர்களுக்கு எதையும் சொல்லி தன்கருத்தை உணர்த்தக்கூடிய மன நிலையற்றவரக்ள்.
எவ்வளவு உயர்ந்த கல்வி பெற்றிருந்தாலும் அவர்களால் யாருக்கும் எந்த விதமான பயனும் இல்லை, தன் கருத்துக்களை வெளிப்படையாக பேசாமல் மிதர்ப்பால் தான் ஆயுளை நிறைவு செய்து கொள்வார்கள்.
தனக்குள் இருக்கும் தவறான கற்பனை வளத்தால் அறிந்ததை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்கும் இல்லை, ஞானிகள், மகான்கள் எழுதி வைத்ததையும் நம்பிக்கையில்லாமல் ஆராய்ச்சி செய்து கொண்டே அதற்கு முடிவே இல்லாமல் தன் முடிவை நெருங்கி விடுவார்கள்.
ஒவ்வொருவரும் மரணத்தை நோக்கித் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம், அதில் ஒரு சிலர் மரணமில்லை பெருவாழ்வு பற்றி நிறைய பேசுவார்கள் செயல் படமாட்டார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளால் தான் உண்மையைச் சொல்லாயே ஆகவேண்டும் என்ற மனோவேகம் உண்டாகிறது.
தியானப் பயிற்சியின் மூலம் அறிந்து கொண்ட நல்ல விஷயங்களை நல்ல கருத்துக்களை தெளிவாக்க வேண்டும் என்ற சிறு முயற்சியே இந்த நூல்.
தியானம் சம்மந்தப்பட்ட இந்த நூலினை சுற்றிவளைத்து கதை படிப்பதைப் போன்ற உணர்வினை ஏற்படுத்தாமல் எதையும் நேரடியாகச் சொல்லும் போதும் அதைப் படிப்பவர்கள் தெளிவாக உணரும் வாய்ப்பு அதிகம். படிப்பவர்கள் தனக்குள் இருக்கும் ஞானத்தை நூலின் மீது செலுத்தி தீவிர சிந்தையுடன் படித்தால் மனம் தெளிவடையும், நூலின் தன்மையை புரிந்து கொள்ள முடியும்.
முன்னோர்கள் சொல்லிவைத்தையே நான் அறிந்து கொண்ட முறையில் விளக்கியிருக்கிறேன். சொல்வது யார் என்று சிந்திக்காதீர்கள், சொல்லப்பட்ட விஷயங்களை கூர்ந்து கவனியுகள் சொன்னது யார் என்று புரிந்து விடும்.
தியான யோகம் வழிபாடு முறைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதியும். வீட்டுக்கு ஒரு போதிமரமாய் இந்நூல் அனைவருக்கும் பயன்படும் என்பது நிச்சயாம்.
நல்ல மனம் உள்ளவர்களாகவும், தூய அன்புள்ளவர்களாகவும், நோயற்றவர்களாகவும், பாவமற்றவர்களாகவும், நல்ல செல்வங்கள் உடையவராகவும்.
இரக்க குணம் உறையவராகவும், இந்த பிரபஞ்சத்தை நேசிப்பவராகவும், இறைப் பண்புகளுடன் நூலின் ஞானம் பெற்று வாசிப்போர் வளமுடன் நீடுழி வாழ எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்
மேலும் படிக்க…..
வாசி யோகத்தின் தியானமும் காயகல்பமும்