தியானப் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்?

தியான பயிற்சி என்பது உடல், மனம் சம்பந்தப்பட்டது. தியானப் பயிற்சி செய்பவர், தன் உடம்பை பற்றி உணர்ந்து கொள்வார். தியானப் பயிற்சி முறைகளை நூல்களில் படித்து தெரிந்து கொள்ளலாம். பொது அறிவாக மட்டும், ஆனால் தியானம் கற்றுக்  கொள்ள முடியாது. குரு அல்லது ஆசிரியர் முன்னிலையில் மட்டுமே பயிற்சி செய்ய வேண்டும். அவர்கள் அறிவுரைப் படி பயிற்சி செய்வதே சிறப்பு.

தியானம் பற்றி தெரிந்து கொள்ள.

நூல்களைப்  படிக்கலாம்,  ஆனால் தியான பயிற்சி செய்ய முடியாது. தியானத்தைப்  பற்றிய அடிப்படை பயிற்சி  இல்லாத ஒருவர்,நூலைப் படித்து  பயிற்சி செய்யலாம் என்று நினைத்தால் அது தவறான எண்ணம்.

ஒரு வாரத்தில் தெரிந்து கொள்ளலாம், ஒரு மாதத்தில் தெரிந்துகொள்ளலாம்  என்று நினைப்பதும், சொல்வதும் தவறானது,  தியான பயிற்சியை ஒருவர் உணர்ந்து கற்றுக் கொள்ள,  குறைந்த பட்சம் ஐந்து வருடம் நிர்ணயித்து உள்ளார்கள் ரிஷிகள், தீவிர பயிற்சியில் இருந்தால் மட்டுமே ஐந்து வருடம்.

தியான பயிற்சியைப் பற்றிய, எந்தவிதமான அறிவும், இல்லாத ஒருவரை, மிக சுலபமாக பயிற்சி அளித்து விடலாம், நூல் அறிவால்  சுயமுயற்சி பயிற்சி  உள்ள வரை எளிதாக புரிய வைக்க முடியாது.

ஏற்கனவே நான் படித்த நூல்களில் உள்ள கருத்துக்களை மன  பதிவில்  வைத்து இருப்பார், பயிற்சியின் போது, குரு அல்லது ஆசிரியர் சொல்லும் கருத்துகளை, பயிற்சி பெறுவர் நூல் அறிவால் தான் அறிந்து கொண்ட கருத்துகளை ஆசிரியர் சொன்ன கருத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார், மனம் ஆராய்ச்சியில் எதை ஏற்றுக் கொள்வது என்ற குழப்பத்தில், முடிவு தெரியாமல் பயிற்சியை விட்டு விடுவார்.

குரு சொல்லும் பயிற்சி முறை செய்யாமல், மனம், ஏற்கனவே தான் படித்து அறிந்து கொண்ட முறையையும் குரு சொன்னதையும் மனம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடும். பயிற்சியில் மனதை செலுத்தாமல்  ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தால், எப்படி பயிற்சியில் தெளிவு பெற முடியும். ஒவ்வொருவருக்கும் ஆராய்ந்து பார்க்கும் மனம் அவசியம் வேண்டும்.

ஆனால் நூல்களில் சொல்லப்படாத, அடிப்படைப் பயிற்சியில் நூலறிவு இணைத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்வதே, தியான பயிற்சிக்கு மிகப் பெரிய தடையாகும். தன் மனதில் எழுந்த கேள்விக்கு, பதில் தெரியும் வரை மேற்கொண்டு என்ன சொன்னாலும் மனதில் பதியாது.

மேலும் படிக்க…..

கருவில் யோகம்

எந்த கேள்வியால் மனதில் பயிற்சிக்கு தடை உண்டானதோ, அதற்கு உண்டான பதில் தெரியும் வரை, குழப்பமும், தடையும் நீங்காது, தியான பயிற்சியில் ஆர்வம் இல்லாமல் போய் விடும். அதனால் அடிப்படை பயிற்சியின் போது ஆராய்ந்து பார்க்காமல் பயிற்சி செய்ய வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக.

பயிற்சி செய்வதை சேர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதமான எதிர்பார்ப்புகள்  இல்லாமல் இருக்க வேண்டும். பயிற்சி செய்வதை சுமையாக நினைக்கக்கூடாது.

ஒருவர் அலுவலகத்தில் பணி செய்ய முதல் தளத்திற்கு பல முறை ஏறி இறங்குகிறார், எத்தனை தடவை ஏறினோம், இறங்கினோம், என்று எண்ணிப் பார்ப்பதில்லை.

எத்தனை படிகள் உள்ளது என்பதையும் எண்ணிப் பார்ப்பது இல்லை. எத்தனை தடவை ஏறி இறங்கினாலும் அது மனதில் நிற்பதில்லை. அது போன்ற மனநிலை பயிற்சியில் இருக்க வேண்டும்.

தியானப் பயிற்சியில் மனதை சாதாரண நிலையில் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக விஷயங்கள், தியானம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுவதினாலும்,  கேட்பதினாலும், அவரவர் அறிவுக்கு ஏற்ப கருத்துக்களை புரிந்து கொள்ளலாம்.

பேசுவதால் பல புதிய கோணங்களில், மனம் சிந்தனை செய்ய ஆரம்பிக்கும்.அதுவே பயிற்சியில்  சுலபமாக புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்,

தியான பயிற்சி முறைக்கு, யாரும் ஒரு எல்லையை நிர்ணயிக்க முடியாது. தியானப் பயிற்சியில் வாய் வழியாக சொல்லப்படும் நுட்பங்களை, கேட்பதால், அதுவே அனுபவமும் ஆகிவிடாது. அதை நடை முறை பயிற்சியில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கருவில் ஆரம்பமாகி மரணம் வரை சுவாசம் தடைபடாமல் உடம்பில் உள்ள ஏழு ஆதாரங்களும், அதன் இயக்கங்களும் சீராக நடைபெறுகிறது. இருதயம் தன் இயக்கத்தை குறைத்துக் கொண்டது இல்லை.

இந்த உலகத்தில் பிராண வாயுவை சுவாசிக்காமல் யாரும் இருக்க முடியாது. பிராண வாயுவே  உடம்பிற்கு தேவையான சக்தியாக மாறி, உடல் இயக்கங்களுக்கு உதவியாக இருக்கிறது. பிராண வாயுவை அதிகமாக ஈர்த்துக்கொள்வதால், அதிசயத் தக்க வகையில் நம் உடல், மனம், மாற்றம் அடைகிறது. நினைவாற்றல், மனோ சக்தி அதிகமாகிறது.

இந்த பூமியில் உயிர் வாழவும், உயிர்களை உருவாக்கவும் செய்கிறது பிரபஞ்ச சக்தி, ஒன்பது கோள்களின் சக்தி நம் பூமியை நோக்கி வருகிறது. பிரபஞ்சத்தில் இப்படிப்பட்ட அமைப்பு நம் பூமியை தவிர வேறு எங்கும் இல்லை. வாசியோக தியானப் பயிற்சி செய்வதனால் பிராண வாயுவை இரண்டு வழிகளில் எடுத்துக்கொள்ள முடியும். ஒன்று நாம் சுவாசிப்பது இது இயற்கையாகவே நடைபெறுகிறது.

இரண்டாவது வாசி யோக தியான பயிற்சியின் மூலம் சிரசின் சகஸ்ராரம் வழியாக, உள்ளே ஈர்த்துக் கொள்வது.  இரண்டாவது முறையே நம் உடலுக்கு அதிக சக்தியை தருகிறது.

பூமியில் வாழும் எல்லா உயிரினங்களும், பிராண வாயுவை சுவாசிக்கிறது. பிரபஞ்சத்தில் இருந்து வருவதால் பிரபஞ்ச சக்தி என்றும், உயிர்கள் வாழ அவசியமாக தேவைப்படுவதால் உயிர் சக்தி என்றும், பிராண சக்தி என்றும் சொல்கிறோம். பிரபஞ்ச சக்தி எங்கும் நீங்க மற நிறைந்து இருப்பதால், பிரபஞ்ச சக்தியை இறை சக்தி என்றும் சொல்கிறோம். 

வாசியோக தியான பயிற்சி.

வாசியோக தியான பயிற்சி செய்வதால், தன்னை உணர்தல், நோயின்றி வாழ்தல் வரும் முன் அறிதல், தெளிவான சிந்தனை,  உடலில் சீரான இரத்த ஓட்டம், எந்த நிலையிலும் பதட்டமில்லாத மனம், அன்பு நிறைந்த மனம். எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நேசித்தல் பரந்த மனம் என நன்மை தரும் பல விஷயங்களுக்கு நமக்கு உதவியாக இருப்பது வாசி யோக தியான பயிற்சியே.

தியான பயிற்சியினால், பயிற்சி செய்பவர், அவரை சார்ந்தவர்கள். அவர்கள் இருக்கும் பகுதி என, எல்லாரையும் நலமுடன்  வாழ்வாங்கு வாழவைக்கும் என்பது உண்மை.

இந்த உலகத்தில் சிந்திக்கத் தெரிந்த மனிதனாய் பிறந்து சிந்திக்க மறந்தவர்களே அதிகம், வாசி யோக தியான பயிற்சியின் மூலம், தனி மனித ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

வாசியோக தியான பயிற்சியை ஒவ்வொருவரும் பயலே வேண்டும். முதலில் தன்னை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

தன்னை நேசித்தல் என்பது சுயநலம் அல்ல, தன்னை நேசித்தால்  பிறரையும் நேசிக்கும் தன்மை உருவாகும். தன்னை உணர்ந்தால் மட்டுமே பிறர் உணர்வுகளை உணர முடியும்.

தூய்மையான  மனத்துடனும் எதிர்பார்ப்புகள் இல்லாத எண்ணத்துடனும் வாசியோகப் பயிற்சி செய்வதால் நம் மூளையில் பதிவாகிறது.

தொடர்ந்து செய்து வரும் வாசி யோக தியானப் பயிற்சி முறையினால், இரத்தத்திலுள்ள அணுக்கள் தூய்மையானதாக மாறுகிறது. மூளையில் பதிவான வாசியோக தியான பதிவுகளால், அது சாத்தியமாகிறது.

மேலும் படிக்க…..

பிரபஞ்ச சக்தியின் வினைகளும் மகான்களும்

எதிர்மறை எண்ணங்களால் இரத்தத்திலுள்ள அணுக்களில் பதிவாகி நோய்களில் தன்மை அதிகமாகி உடம்பே விஷமாக மாறுகிறது.

எதிர்மறை எண்ணங்களினால் மூளையில் பதிவான பதிவுகளே,, இரத்த அணுக்களில் பதிவாகிறது. எதிர்மறை எண்ணங்களே பலவித நோய்களுக்கு வித்தாக அமைகிறது.

தூய்மையான எண்ணங்களினால் பதிவு செய்யப்பட்ட இரத்த அணுக்கள், எதிர்மறை பதிவுகள் கொண்ட அணுக்களை கொல்கிறது. அதனால் நோய்கள் வராமல் தடுக்கிறது.

இதற்கு மூல காரணமே நமது எண்ணங்கள் தான், நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்பது நம்முடைய முன்னோர்களின் அனுபவ பழமொழி. இது நம்முடைய உடம்புக்கு மட்டுமல்ல புற வாழ்க்கைக்கும் பொருந்தும்.

எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, தூய்மையான எண்ணமும் எதிர்பார்ப்புகள் இல்லாத மனமும், உடையவர்களுக்கு நோய்கள் அணுகாது, வாசி யோகப் பயிற்சி மிக அவசியமானது.

வாசியோக  தியானப் பயிற்சிகள் நோயின்றி நீண்ட காலம் வாழலாம். எதிர்பார்ப்புகள் இல்லாத மனதில் எப்போதும் மன அமைதியும், சந்தோஷமும் மற்றும் மகிழ்ச்சியும் இருந்து கொண்டு இருக்கும்.

ஆசைப்பட, ஆசைப்பட நம்மை நாடி வரும் துன்பங்கள் பலகோடி. வாசியோக தியானப் பயிற்சி முறையால் துன்பங்களும், நோய்களும் நம்மை நாடாமல் இருக்கும்.

தூய்மையான எண்ணங்களுடன் வாசி யோக தியானப் பயிற்சி செய்து, நம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் மன நலமும், உடல் நலமும் பெற்று, மகிழ்ச்சியுடன் மன  நிறைவாக வாழ முயற்சி செய்வோம்.

 நல்ல மனம் உள்ளவர்கள்.

 நாம் வாழ்ந்து வந்த வாழ்க்கையிலும், வாழும் வாழ்க்கையிலும், வந்த அனுபவங்களால் உண்மைகளை உணர்ந்து கொண்டு இயல்பாக, வாழுகின்ற காலத்தில் நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும். மரணம் என்பது எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்டது. மரணத்தைப் பற்றிய அச்சம் இல்லாமல் இருக்கவேண்டும்.

வாழ்க்கையில் நேர்மையான எண்ணமும் நல்ல நடத்தையும் இருந்தால் மரணத்தைப் பற்றி பயம் இருக்காது

எல்லா தெய்வங்களும், தன்னால் படைக்கப்பட்ட உயிர்களை காத்து ரட்சிக்க  வேண்டும். திரு உள்ளத்தோடு அபயகரம் காட்டுகிறது. எந்த  தெய்வங்களும் யாரையும் இம்சிப்பதில்லை.

தீய எண்ணங்களாலும் தவறான நடத்தைகளாலும்,  அவன்வன் செய்கின்ற தவறுகளுக்கு தண்டனையை அனுபவிக்கிறான். இறைவன் யாரையும் தண்டிப்பதில்லை.

ஆலய தரிசனம், இறை வழிபாடு, தியானம் இவற்றால் இறைவனை நினைத்து வாழ்ந்து வந்தா ஓமே தண்டனையும் மரண பயமும் நம்மை அணுகாது

வஞ்சக எண்ணம், பொறாமை படுதல் குறிசொல்லுதல் இவற்றில் மனம் மாசடைகிறது மாசடைந்த மனதை தூய்மையாக தியானப்பயிற்சி  செய்வதானாலும் பிரதிபலன் எதிர்பார்க்காத தோன்றினாலும் ஆலய தரிசனம் இறை வழிபாடு செய்வதன் மூலம் மனம் தூய்மை அடைகிறது

தூய்மையான எண்ணங்களுடன், தான் அறிந்து கொண்ட உண்மைகளைக் கொண்டு, வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல நெறிகளுடன் இருப்பதும் யோகம் தான். வாழ்க்கையில் நிலையானது எது?  நிலையில்லாதது எது?  என்பதை அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

புகழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம், எது வந்த போதும் மனதை சமநிலையில் வைத்திருப்பது மிக அவசியமானது.

யோகத்தால் தான் அறிந்து கொண்ட அற நெறிகளை, வாழ்க்கையில் கடைபிடித்து வசதிக்கு ஏற்றவாறு தான, தர்மங்கள் செய்ய வேண்டும்.

புலன்களுக்கு சுகம் தரும், இன்ப உணர்வுகளை உறுதியான எண்ணங்களுடன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்பெறுமை ,சுயநலம்,ஆணவம் இல்லாத ஒரு செயலும் யோகத்திற்கு சமமானது.

தாய், தந்தை, குரு, இவர்கள் இருக்கும் வரை போற்றி ரட்சிக்க வேண்டும். தன்னையறிதல் என்பது, வாழ்க்கையில் மிக அவசியமானது.

நல்ல விஷயங்களை கேட்டல், நன்நெறிகளை கற்றல், அறிந்து கொண்டதை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

என்பதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நற்செயலும், சொல்லும், ஒன்றாய் இருக்க வேண்டும். மனதை தன் நம்பிக்கையுடன் இயல்பாக வைத்திருக்க வேண்டும்.

மனதாலும், செயலாலும், மற்றவர்கள் மனம் வருந்தும் படி நடந்து கொள்ளக் கூடாது. இவை அனைத்தும் நியமத்துடனும்,  குணநலன்களுடனும்   இருப்பவரை நல்ல மனம் உள்ளவர்கள் என்பரே.

தனி மனிதனின் ஒழுக்கமே மாமனிதனாக உயர்த்தும். அவரால் ஒரு சமுதாயம் மேன்மை அடையும். ஒரு சமுதாயம் மேன்மை அடைந்தால் ஊர் முன்னேற்றம் அடையும்.

ஒரு ஊரின் முன்னேற்றம், நாட்டை முன்னேற்றும், நாமும் நலம் பெறுவோம். நாடும் வளம் பெறும். எல்லோரும் நலம் பெற வளம் பெற சுயநலமில்லாமல் தியானம் செய்வோம்.

நன்றி

ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்

மேலும் படிக்க…..

ஏன் தியானம் செய்ய வேண்டும் ?

 

Leave a Reply

Your email address will not be published.