தியானமும் உண்மையும்

 எத்தனையோ சந்நியாசிக தியானம் செய்யுங்கள் வாழ்க்கையில் வளம் பெறலாம், நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம் என்று பெரிய கூட்டம் சேர்ப்பார்கள். அப்படி எல்லாம் வாழ்க்கையில் முன்னேறலாம் தியானத்தினால்  என்ன என்ன  நன்மைகள் உள்ளது. என்பது பற்றி மிகத்தெளிவாக சொல்வார்கள்.

உண்மையான குருவின் திருவருளைப்  பெறாத.

ஆனால் எப்படி தியானம் செய்ய வேண்டும் அதன் ரகசியம் என்ன எப்படி செய்தால் மிக  எளிதாக இருக்கும் என்ற உண்மைகளை நிச்சயம் சொல்லமாட்டார்கள் உண்மையைச் சொன்னால். அவர்கள் பின்னால் கூட்டம் போகாது, கூட்டமும் சேராது அவர்களும் உண்மை பேச மாட்டார்கள்.

வேடதாரிகள்,   உண்மையான குருவின் திருவருளைப்  பெறாத, அதன் மகத்துவம் அறியாத மூடர்களை ஒரு நாற்றமடிக்கும் ஆடு கழுத்திலேயே தாடி வளர்த்து ஓடித்திரியும்  புலையாட்டிற்கு ஒப்பானவர்கள்.

 பண்புகள்  இல்லாத   வெறியாட்டங்கள்  நிறைந்த  மனத்தினர். அழிவுச்  சின்னங்களாம் ஞானிகள், மூடர்கள், அவர்கள்  வேடமணிந்து அவர்களின் புகழை கெடுக்கும் வேடதாரிகள்.

அப்படிப்பட்டவர்களால் மக்களுக்கு நாட்டிற்கும் எந்த ஒரு நன்மையும் செய்ய முடியாது என்று சாடுகிறார் ஞானக் கும்மி ஞானியார்.

 அப்படி ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை மிக எளிதாக தியானம் செய்வது பற்றி எத்தனையோ சித்தர்கள், மகான்கள், ஞானிகள் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.

 இந்த உலகத்தில் அரிய கண்டுபிடிப்பாக அவர்களே  நினைத்துக் கொண்டு மூடி மறைத்து வருகிறார்கள் இப்பொழுது உள்ளவர்கள்.

 தியானப் பயிற்சியில் ஈடுபாடு என்பது அவர்கள் பிறந்த ஜாதகத்தில் கிரக அமைப்புகள் படிதான் நடைபெறுகிறது. எல்லாரும் கற்றுக்கொள்ள முடியுமா என்றால், ஒரு திசையில் நடைபெறும் புத்தி அந்தரம்.  நடைபெறும் கால அளவு மட்டும் வேண்டுமானால் தியானப் பயிற்சியாளர்களின்  தொடர்பு  ஏற்படலாம்   ஆனால் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளவது என்பது நிச்சயம் நடக்காது.

மேலும் படிக்க…..

தியானப் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்?

ஜாதகத்தின் அமைப்பு, கிரகங்களின் பார்வை.முன் செய்த நல் வினைகள் காரணமாக அப்படி  ஒரு  பயிற்சியினால் ஞானம் பெற முடியும் என்ற  விதி  உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து ஞானப்பயிற்சியில் ஈடுபடமுடியும்.

 ஏற்கனவே நமது முன்னோர்கள் வரையறுத்துக் கூறி உள்ளார்கள் இதற்கு மேல் ஒன்றும்  இல்லை என்று.  இப்பொழுது கூட்டம் சேர்க்கும் சந்நியாசிகள் புதிதாக ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை.

பரிபாஷை  என்னும் புரியாத  தமிழில்.

திருமூலர்,  அகஸ்தியர் சொல்லியதை விட இவர்கள் ஒன்றும் புதிதாக சொல்லிவிடப் போவதில்லை.  18 சித்தர்கள் சொல்லியதை விட இவர்கள் ஒன்றும் புதிதாக சொல்லி விடப் போவதில்லை.

 அகஸ்தியர் சொல்லியதை விட இவர்கள் ஒன்றும் விஞ்ஞானபூர்வமாக சொல்லிவிடப் போவதில்லை. அகஸ்தியர் அருளிய “சுப்பிரமணிய ஞானம் 300”  என்ற புத்தகத்தில், குண்டலினி சக்தியானது எப்படி மேலெழும்புகிறது. என்பதை விஞ்ஞானப்பூர்வமாக நுட்பமாக விளக்கியுள்ளார்.

 இப்படி எத்தனையோ சித்தர்கள், மகான்கள் எழுதிவைத்திருப்பது சொல்லியிருப்பது, இவர்களுக்குப் புரியவில்லை என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

சித்தர்கள்   சொல்லியிருப்பது புரியாமல், பரிபாஷை  என்னும் புரியாத  தமிழில் எழுதியிருக்கிறார்கள்   என்று  நாம்  நினைக்க   வேண்டியதில்லை    சித்தர்கள்,  மகான்கள் அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் அப்பொழுது உள்ள மக்களுக்கு மிக எளிமையாக தெளிவாக  புரிகின்ற மாதிரிதான், பாமரனும்  புரிந்துகொள்ளும்  வகையில் தான் எழுதியிருக்கிறார்கள்.

 காலமாற்றம், முன்னேற்றம் இவைகளினால் மொழி  மாற்றம் ஏற்படுவது இயற்கை. இன்றைக்கு ஒரு மாவட்டத்தில் பேசப்படும் தமிழ்மொழி வேறு மாவட்டத்தில் மாறுபடுகிறது ஆனால் எல்லோரும் தமிழ்மொழிதான் பேசுகிறார்கள்.

 இன்றைக்கு உள்ள   அத்தனை கவிதைகள்,  பாடல்கள், கதைகள் மக்களுக்குத் தேவையான செய்திகள் எல்லாம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தான் மிக எளிமையாக உள்ளது.

 மேற்சொன்ன அனைத்தும் ஒரு இருநூறு  வருடங்கள் கழித்து அன்றைக்கு வாழும் மக்கள், இதையெல்லாம் பரிபாஷை என்று சொன்னால் எப்படியோ அப்படித்தான் நாமும் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

 இப்படி எத்தனையோ விஷயங்கள், ஆனால் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழ் மொழியில் எந்த சப்தத்தையும் பறவைகளின்  கூவுதல், வண்டின் ரீங்காரம், மிருகங்களின் உறுமல், இசையின் நாதம் இப்படி எல்லாவற்றையும் எழுத்து மூலமாக சொல்ல முடியும், நாம் எதைப் பற்றி சொல்கிறோமோ அதை பற்றி படிப்பார்கள் அப்படியே உணர முடியும்.

இதுபோல் மற்ற மொழிகளில் எழுத முடியாது, சொல்ல முடியாது. இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு.

திருமூலர் பாடல்களில் உள்ள தோம்புதல் பற்றி (வாசியோகம்) அறிவோம். தியானம் செய்ய மனதை அமைதிப்படுத்தி கொண்டு மனதை ஒரு நிலையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

 வைணவ சம்பிரதாயங்களை  முறைப்படுத்தியவர் ஸ்ரீ இராமானுஜர்.

அவர் பல வருடங்கள் குருவிற்குப் பணிவிடை செய்து தெரிந்து கொண்ட மகா மந்திரம் “ஓம் நமோ நாராயணா”  இதை மனதினால் மட்டும் சொல்ல வேண்டும் சத்தமாகப் பிறர் கேட்கும் வண்ணம் சொல்லக்கூடாது, அப்படிச் சொன்னால், நீ நகரம் போவாய் என்பது குரு கட்டளை.

நான் ஒருவன் நகரம் போனாலும் பரவாயில்லை மக்கள் அனைவரும்  இந்த சத்திய வார்த்தையை உணர்ந்து மக்கள் அனைவரின்  வாழ்க்கையை  உய்விக்க வேண்டும் என்று பரந்த எண்ணத்துடன்.

கோபுரம் மதில் மேல் ஏறி அனைவரும் கேட்கும் படியாக மிக  சப்தமாக ஓம் நமோ நாராயணா என்ற மகா மந்திரத்தை கூறினார்.

இதுவல்லவோ ஒரு மகா ஞானியின் பரந்த உள்ளம் அப்படி ஸ்ரீ ராமானுஜர் சொல்லியதால் அவர் ஒன்றும் நகரத்திற்குப் போகவில்லை மாறாக  ஸ்ரீமன் நாராயணன் உள்ளத்திலே எப்பொழுதும் உடையவராக ஆனார்.

வைணவர்கள் உள்ளங்களிலே உடையவராக  உள்ளார். அன்று முதல் இன்று வரை ஸ்ரீ உடையவர் என்ற திருநாமத்துடன் வைணவர்களுக்கு ஞானத்தை வழங்கி கொண்டு இருக்கிறார். தென்கலை, வடகலை, சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கும் வைணவர்களுக்கு இவரை குரு.

அருட்பிரகாசர்  இராமலிங்க சுவாமிகள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார், அத்தனையும் சத்திய வாக்குகள்.  புறஞ்சொல்லேன், பொய்புகலேன்,  சத்தியம் சொல்கிறேன் கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று.

உண்மைகளை மறைத்து புறஞ்சொல்லி வருபவர்கள் தான் அதிகம் சந்நியாசிகளை வைத்துக் கொண்டு பணம் பார்க்கும் கூட்டம் தான் அதிகம்.

மேலும் படிக்க…

வாசி யோகத்தின் தியானமும் காயகல்பமும்

ந்த உலகத்தில் மிக அரிய கண்டுபிடிப்பாக தான் மட்டும் கண்டுபிடிப்பதைப் போல் மார்தட்டிக் கொள்கிறார்கள். இன்று சொல்லும் அத்தனை விஷயங்களும் ஏற்கனவே சொல்லப்பட்டவை தான்.

மகான்கள் வாழ்ந்தகாலத்தில் நாம் பிறக்கவில்லை அப்படி பிறந்திருந்தாலும் நாம் கற்றுக் கொடுக்க மாட்டோம் ஆனால், இன்று அத்தனை மகான்களும் சொல்லியதை எல்லாம் படித்து உணர நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்பிறவியில்  நம்மால் எத்தனை வருடங்கள் தியானம் (வாசி யோகம்) செய்ய வாய்ப்பு கிடைக்குமோ அந்த நாள் வரை தொடர்ந்து செய்வோம்.

இப்பொழுதும்  நாம் புறக்கணித்தோம் என்றால் இனி  இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிட்டாமல்  போகலாம். இந்த மாதிரி ஞானம் பற்றி புத்தகங்கள் ஒருங்கே கிடைப்பது அரிது. இப்பிறவியில் நாம் புண்ணியம் செய்தவர்களாக  இருப்பதால் ஞானத்தைப் பற்றிய நூல்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் ஒரு வாய்ப்பை இறைவன் அளித்துள்ளான்.

மனிதன் தனக்குள் அடங்கி  இருக்கும்.

மகத்தான சக்திகளை புரிந்து கொள்ளாமல் வீணாக்கிக் கொண்டு வருகிறான். கடவுளின் மறு உருவமே மனிதன், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து  சக்திகளும் மனிதனிடம் உள்ளது.

புற வழிபாடு செய்வதினால்  செய்பவர்க்குப்  பெருமையாக  இருக்கலாம், அகவழிபாடு   ( தியானம், வாசியோகம்) செய்பவர்களுக்கு முக்திக்கு வழி கிடைக்கும். ஒவ்வொருவரும் முக்தியடைய வேண்டும்.

என்ற  எண்ணத்தினாலேயே காடு, மலை, குகைகளை  தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அங்கெல்லாம்  கிடைக்காது  என்பதை அறியாமல் காலத்தை வீணாகும் வீணாக்குகின்றர்.  நம்மிடமே  அனைத்து சக்திகளும் உள்ளது என்பதை அறியாமல், அனுமதி வேண்டும் என்பதற்காக தனிமை நாட வேண்டாம். காடு, வனம், மலை தொலைதூரம் போக வேண்டாம் இருக்கும் இடத்திலேயே முயற்சி செய்யுங்கள், முயற்சி திருவினையாக்கும்.

யாரும் இல்லாத இடம் சப்தம் ஒன்று கேட்காமல் இருந்தால் தான் தியானம் கைகூடும் என்று அடிப்படை தவறுகள் செய்ய வேண்டாம். அதுவே பிற்காலத்தில் இயலாமல் போகும். 

தனிமை தான்  உகந்தது என்ற எண்ணம் வருமேயானால் தியானம் செய்யத் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவோம் தொடர்ந்து பயிற்சி செய்வோம் முக்தி வழி  தேடுவோம்.

ஒவ்வொருவரும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மாணவன் தேர்வுக்கு முன் தன்னை தேர்வு பற்றிய பாடங்களை தெளிவுபடுத்தி வைத்துள்ளவதைப் போல் நாமும் தியானம் பற்றிய பயிற்சி முறைகளைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். மனதையும் உடலையும் எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அது மிக அவசியம்.

நாம் வாழ்க்கை முழுவதும் தேடினாலும் கிடைக்காது போகலாம், அது திடீரென ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மகான்கள், சித்தர்களின், பெரியவர்களை நாம் சந்திக்க நேரிடலாம். அப்பொழுது அவர்கள் நம்முடைய  தகுதியினை தெரிந்து கொள்வார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓரளவுக்கு தியானத்தை பற்றிய ஞானம் இருக்குமேயானால் மகான்களுடைய சக்தியினால் நம்மை மேல் நிலைக்கு உயர்த்தி விடுவார்கள்.

அதை பெறுவதற்கும் அவர்கள் கொடுக்கும் சக்தியினை தாங்கும்  மனமும் உடலும் தயார் நிலையில் இருந்தால் அவர்கள் வேலை மிக சுலபமாக முடிந்துவிடும்.

இன்று நாம் செய்யும் முயற்சியின் அனைத்தும், வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தான் முயற்சியை மேற்கொள்கிறோம். வெற்றி தோல்வியை நாம் நிர்ணயிக்க முடியாது. இந்த முயற்சிக்கு தான் பகவத் கீதையிலே கண்ணன்.

“கடமையைச் செய் பலன் தானாக வரும்”

“எல்லோரிடத்திலும் நான் இருக்கிறேன்”

“ஆனால் என்னிடத்தில்  யாரும் இல்லை “- என்று

எந்த ஒரு முயற்சியும் பலவிதமான கஷ்டங்களை தாண்டி தான் வெற்றி பெறும் முயற்சியும் உழைப்பும் இல்லாமல் வெற்றி பெற முடியாது.

தியான ஞானங்கள் பற்றி இந்தப் பிறவியிலேயே நமக்குத் தெளிவு உண்டாகுமா இல்லை, அடுத்த பிறவியில் உண்டாகுமா, என்ற கேள்விக்கு பதில்

“கடமையைச் செய் பலன்  தானாக வரும்”   என்பதே

ஞானம் என்பது அறிவின் மேம்பட்ட நிலை அனுபவத்தால் மட்டுமே வருவது. பதினைந்து  பதினைந்து  ஞானம் பெறுவது, அடைவது என்பது அவதாரப் புருஷர்கள் மட்டுமே.அவர்கள் ஞானிகளாகவே பிறக்கிறார்கள்.

நாம் முயற்சி செய்கிறோம். எது எப்பொழுது என்பதை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது. அதையும் மீறி அப்படி செய்வதால் பலன் கிடைக்கும், ப்படி செய்தால் பலன் கிடைக்கும், என்பது மாதிரியான விஷயங்கள் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஆகிவிடும்.

நம் முயற்சிகளில் தெளிவோடு எப்பொழுதும் இருப்போம். காற்று வரும் போது தூற்றிக் கொள்வோம். அதுவரை முயற்சி முயற்சி முயற்சி செய்துகொண்டு விழிப்புடன் இருப்போம்.

தியானம் செய்வதற்காக ஆசனங்கள் தேர்வு செய்து, அப்படி பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்தால் தான் தியானம் சித்திக்கும் என்பது இல்லை.தியானம் செய்ய ஆசனம் மிக முக்கியமானது ஒன்று அல்ல தியானத்தில் அமரும் ஒருவர் அவருக்கு எந்த மாதிரி அமர்ந்தால் மிகவும் சவுகரியமாக இருக்குமோ அப்படி அமர்ந்து கொண்டு தியானிக்கலாம்.

தலை முதுகு நேராக வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவே.

தியானம் என்பது மனம் சம்பந்தப்பட்டது,  உடல் சம்பந்தப்பட்டது அல்ல, சிரசு முதுகும் வைத்துக் கொண்டாலே போதும் நாற்காலியில் நேராக அமர்ந்து தியானிக்கலாம்.

சுவற்றில் சாய்ந்து கொண்டு தியானிக்கலாம், காலை நன்றாக நீட்டி கொண்டு தியானிக்கலாம், சவாசனம் என்ற நிலையில் நேராக படுத்துக் கொண்டு உடலை தளர்வாக வைத்துக்  கொண்டு செய்யலாம்.

எப்படி எந்த நிலையில் இருந்தாலும் தியானம் செய்து என்ற மனோபாவத்துடன் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் நிச்சயம் தியானம் சித்திக்கும் வணங்கினால் மட்டும் தியானம்   சித்தியாகும் என்ற தவறான எண்ணம் வேண்டாம்

ஏனென்றால் நாம் செய்யும் தியானம் இருதயம், கழுத்து, சிரசு இந்த மூன்றுக்கும் மட்டுமே முதலிடம் கொடுத்து செய்கிறோம். இதில் மனம் மட்டுமே முக்கியம், தியானம் மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நன்றி

ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்

மேலும் படிக்க…..

பிரபஞ்ச சக்தியின் வினைகளும் மகான்களும்

 

Leave a Reply

Your email address will not be published.