இறை வழிபாடும்  பிரார்த்தனையும்

பரபரப்பான  இன்றைய  விஞ்ஞான உலகில் இறைத்தன்மையும், மெய் ஞானமும், விஞ்ஞானமும் சமமாகவே உள்ளது. ஒரு பக்கம் செவ்வாய் கிரகத்திற்கு, வியாழன் கிரகத்திற்கும், சனி கிரகத்திற்கும் ஆளில்லாத விண் கலங்கள் பறந்து கொண்டே தான் இருக்கிறது.

இன்னொரு பக்கம் தினம் ஒரு புதிய கோயில், சாமியார்கள் உருவாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

ஒருமுறை பூரணமாய் வலம் வருகிறான்.

மக்கள் விஞ்ஞானத்தின் பக்கம் செல்வதா மெய் ஞானத்தின் பக்கம் செல்வதா என்று புரியாமல் குழப்பத்தில், என்ன செய்கிறோம் என்ற சிந்தனை இல்லாமல், தான் செய்வதெல்லாம்  சரியானது, தான்  நினைப்பதெல்லாம்  சரியானது என்ற எண்ணத்தில் பெரும் தவறையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

எல்லா சாமியார்களிடமும்,  கூட்டம் போய்க் கொண்டே தான் இருக்கிறது, தனக்கும் ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்ற எண்ணத்தில், பேராசையில் சாமியார்களிடம் நெருக்கம் ஆகிறான்.

எதுவும் கிடைக்கவில்லை என்றால் இன்னொரு சாமியாரிடம் செல்கிறான். அங்கு பலன் இல்லை. அவனுக்கு தெரிந்த, தெரிந்தவர்கள் சொன்ன அத்தனை  சாமியார்களிடமும் ஒருமுறை பூரணமாய் வலம் வருகிறான் அப்படியும் வெறுங்கையுடன் திரும்பி வந்தது தான் பலன்.

இன்னொரு பக்கம் சந்யாசிகள், ஆன்மீக சிந்தனை, தியானம், ஸ்த்சங்கம் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, மன அமைதி என ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவையான மிக அவசியமான விஷயங்களையும் தொட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மக்கள் மனத்தினை  நல் வழிப்படுத்துகின்ற  பொதுத் தொண்டை எந்த விதமான பிரதிபலன்களும்  எதிர்பார்க்காமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை நாம் தேடித்தான் போக வேண்டும், நாம் தேர்ந்தெடுக்க மனத் தெளிவோடு இருக்க வேண்டும். கூட்டம் இருக்குமிடத்தில் சக்தி இருக்காது, சக்தி இருக்கும் இடத்தில் கூட்டம் இருக்காது, சாமியார்களை தேடி காலம் விரயம்  செய்த நேரத்தில் உழைத்தால் தான் சாமியார்களிடம் எதிர்பார்ப்பதை விட அதிகமான பலன்  கிடைத்திருக்கும். இந்தப் புனித காரியங்களை படைத்தவனும் செய்கிறான்.

மேலும் படிக்க…..

தியான வழிபாடு சூட்சமமான ரகசியங்கள்

போகின்ற வழியில் கண்ணுக்கு  தெரிந்த கோயில்களை  எல்லாம்  கும்பிடும் போடுகிறான் பக்தியினால் அல்ல, கோவிலைக்  கண்டால் இப்படி செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணங்களினால், தவறான செயல்களை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள் எல்லா கடவுளுக்கும் வழிபாடு மன்றம் ஆரம்பிக்காதது  தான் குறையாக உள்ளது. 

கோவிலுக்குச் சென்று இரண்டு நிமிடம்.

நின்று கும்பிடக்  கூட நேரமில்லை, அந்த அளவுக்கு கால நேரம், விரயம் செய்யாமல் உழைத்து பொருள் தேடுகிறார்கள், நிற்க நேரமில்லை மனதில் அமைதி இல்லை, மனதில் அமைதி இல்லாததால் தான் போகிற போக்கில் கும்பிடு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

வாகனத்தில் போய்க் கொண்டு இருந்தாலும் சரி, நடந்து சென்றாலும் சரி, வலது கை முஷ்டியை மடக்கிக் கொண்டு, நெஞ்சில் தொட்டு, அதே வேகத்தில் ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து முத்தமிட்டு அதே விரலை நெற்றியை தொட்டு கொள்கிறார்கள். இந்த மாதிரியான அருவருப்பான செய்கைகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படி செய்வது முறையற்ற செயல்.

இப்படிச்  செய்வது தவறு  என்று சொன்னால், அந்த அளவிலாவது  உதவி பக்தி உள்ளது என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள் என்று சொல்லி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் இப்படியும் ஒரு நொண்டிச்  சமாதானம்

ஆலயத்தில் இறைவனை நோக்கித் தொழும் போது இரு உள்ளங்கைகளையும் இணைத்து,  அனாகதம் என்று சொல்லக் கூடிய நெஞ்சுக்கு நேரே வைத்துக் கொண்டு, இறைவனை ஆத்ம நண்பனாக நினைத்துக் கொண்டு இதயத்தில் இறைவனின் உருவத்தை உள்ளே இருத்தி  கண்களை மூடாமல் இறைவனின் திருமேனியை உற்று நோக்கியபடி கைகள்  கூப்பிய வண்ணம் இருக்க வேண்டும். இது முதல் நிலை.

கைகள் கூப்பிய நிலையில் நெற்றிக்கு நேரே உயர்த்த வேண்டும்,  கைகள்  இரண்டும் ஆக்கினைச் சக்கரம் எனும் புருவ மத்தியில் நிறுத்தி மனதை ஒருநிலைப் படுத்த வேண்டும்.

முதல் நிலையிலே  அனாகதம் என்னும் நெஞ்சுக்கு நேரே கைகள்  நிறுத்தி இருக்கும் போது நமது உடலில் உள்ள மின் காந்த சக்தியின் மூலம் ஆலயத்தில் உள்ள தூய சக்திகளை விரல் நுனிகள் மூலம்  மீட்டுக்கொண்டு நம் உடல் முழுவதும் பரவச் செய்கிறது. 

இப்படி நடக்கும் ஒரு நிகழ்வுகளால் அனாகதம் என்றும் சக்கரம் இயக்கம் பெறுகிறது.

இரண்டாம் நிலையில் ஆக்ஞை என்னும் புருவ மத்தியில் கைகள் இருக்கும் போது ஆக்ஞைச் சக்கரம் இயக்கம் பெறும், ( ஆக்ஞை என்பது கட்டளை  இடுதல்)  இந்த நிலையில் தான் இன்னதெல்லாம்  நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிரார்த்தனையின்  எண்ணம் அதிர்வலைகளாக  வெளியேறுகிறது. நம் உடலில் உள்ள சக்கரங்கள் இயங்கும் போது தான் நம் எண்ணங்களுக்கு சக்தி உண்டாகிறது.

மூன்றாம் நிலையில் நெற்றிக்கு நேரே இருந்த கைகளை ஆயிரம் இதழ் தாமரை என்று சொல்லக்கூடிய சகஸ்ராரம் என்னும் உச்சந்தலைக்கு நேரே மேலே உயர்த்த வேண்டும்.

முதல் இரண்டு நிலைகளில் திறந்த நிலையில் இருந்த கண்களை மூடிக் கொண்டு இறைவனை அகக் கண்ணில் நிறுத்தி என்னால் ஆவது ஒன்றும் இல்லை, எல்லாம் உன் அருளே, நீ இன்றி வேறு கதி இல்லை, உன் பாதங்களில் சரணம் என்று எண்ண வேண்டும்.

ஆலயக் கருவறையின் முன் நின்று வழிபாடு செய்யும் போது.

உடம்பில் மேலாடை இல்லாமல் வழிபாடு செய்ய வேண்டும். கருவறையில் சொல்லப்படும் மந்திரச் சொற்கள் தூய ஒளி அலைகளாக மாறி ஒளி வழிபாடு செய்பவர் மீது பரவி மனதையும், உடலையும் தூய்மையாக மாற்றி விடும் சக்தி படைத்தது.

கருவறையின் மேல் உள்ள (விமானம்) கோபுர கலசம் வழியாக பிரபஞ்ச சக்தியினை ஈர்த்து கருவறைக்குள் செலுத்தும், அந்த சக்தியுடன் கருவறையில் சொல்லப்படும்.

மந்திரம் சொற்களினால் உண்டாகும் ஒலி அலைகளும் சேர்ந்து வழிபாடு செய்பவர் மீது  பரவும். தூய ஒலி அதிர்வுகளால் மனம் (மூளை) அமைதி பெறுகிறது.

கருவறையிலுள்ள  ஈரப்பதத்துடன் கூடிய காந்த அலைகள், தீபாராதனை செய்யும் போது, உள்ளே உஷ்ணம் பரவி, உள்ளே இருக்கும் காந்த அலைகள், உஷ்ண நிலை ஏற்பட்டவுடன் கருவறையை விட்டு வெளியே பரவுகிறது.

மேலும் படிக்க…..

ஏன் தியானம் செய்ய வேண்டும் ?

தீபாரதனை செய்யும் நேரத்தில் வழிபாடு செய்யும் அனைவரும் ஒரே நேரத்தில், மேலே சொன்ன மூன்றாம் நிலைப்படி சிரசிற்கு மேல் இரு கைகளை கூப்பிய வண்ணம் நின்றிருப்பார்கள்.

கருவறையில் இருந்து வெளியேறும் ஈரப்பதமுள்ள காந்த அலைகள், கைகள் பிரமிடின் முக்கோண வடிவம் மூலம் நம் சிரசின் வழியாக உடலுக்குள் பாய்கிறது.

தீபாரதனை செய்யும் நேரத்தில் கண்களை மூடாமல் இறைவனின் திருமேனியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

கண்களை மூடக்கூடாது இறைவழிபாடு செய்யும் போது இது மிக மிக அவசியம்.

இன்றைய அறிவியலின் படி மலை வாசஸ்தலம் கடற்கறை அல்லது கோவில் கருவறையில், காந்த அலைகள் உள்ளது.

மனிதனுக்கு உண்டான வியாதிகள், மனக்குழப்பம், நிவர்த்தியாக பெரும் உதவி செய்கிறது, இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்வதால் மனம் அமைதி அடைகிறது.

ஈரப்பதமுள்ள காந்த அலைகள் ஆலய கருவறையில் உள்ளது என்பதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. வசதிபடைத்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

ஆனால் சாதாரண மனிதனும் கருவறையிலுள்ள காந்த சக்தியால் அவன் உடல் நலமும், மன நலமும், மனம் தூய்மை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

முக்கோண வடிவம் போல் கைகள் உயர்த்திய நிலையில்.

பிரபஞ்ச சக்தி நம் கைகளின் மூலம் சகஸ்ராரம் என்னும் உச்சி கண் வழியாக நம் உடலின்  முதலில் உள்ளே செல்கிறது.

இப்படியாக பிரபஞ்ச சக்தியின் தொடர்பு நமக்கு உண்டாகிறது எங்கும் நீக்கமற திறந்திருக்கும் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலால் மனம் அமைதி பெறுகிறது.

முதல் நிலையில் பிரபஞ்ச சக்தியினை ஏற்றுக்  கொள்ள தயார் நிலையில் மனதை வைத்துக் கொள்கிறோம். இரண்டாம் நிலையில் நம் எண்ணங்களை வெளிப்படுத்தி பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றாகி கட்டளையிடும் நிலையில் உள்ளோம்.

மூன்றாம் நிலையில் நம் எண்ணங்களின்,  மனோ சக்தியை பிரபஞ்ச சக்தியுடன் கலந்து விடுகிறோம். நம் அதிர்வலைகளாக வெளியேற்றியும்   பிரபஞ்ச சக்தியை உடம்புக்குள்ளே ஏற்றுக் கொள்ளவும் செய்து கொள்கிறோம்.

இப்படி ஒவ்வொரு செயலுக்கும் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு உண்டாக்குகிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம், அறிவியல் காரண காரியங்களை சம்பிரதாயம் என்ற முறையில் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள் முன்னோர்கள்.

நம்முடைய  நன்மைக்காக உருவாக்கிய சம்பிரதாயங்களை புரிந்து கொள்ளாமல் ஆள் காட்டி விரலில் முத்தமிட்டு இறைவனை வணங்கும் போது ஒரு அருவருப்பான செயல் இதை நாகரீக கண் கொண்டு பார்க்க கூடாது.

இரு உள்ளங்கைகளையும் இணைத்து இருதயம் (அனாதகம்), நெற்றி (ஆக்கினை) சிரசின் மேல் சகஸ்ராரம்  என்று மூன்று நிலையிலும் நிறுத்தி இறைவனை வணங்க வேண்டும்.

ருவன்  எத்தனையோ ஹோமங்களும், யாகங்களும் செய்தாலும் அது சுய நலத்திற்காக மட்டுமே, அப்படி செய்வதனால் அவனுக்கு எந்த விதமான நன்மைகளும் கிடைப்பதில்லை.

இறைவனின் புகழ் பாடிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் சுய நலத்திற்காக எந்த விதமான ஹோமங்களும், யாகங்களும்  செய்யவில்லை. 

நாயன்மார்கள் வாழ்ந்த காலங்களில் அவர்களுக்கு எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும், அனுபவித்தாலும், தனக்காக யாரும் இறைவனிடம் வேண்டிக் கொள்வதில்லை.

மக்களின் பொது நலன் ஒன்றையே .

குறிக்கோளாக வைத்திருந்தார்கள், அவர்கள் எதைச் செய்தாலும் சுயநலமில்லாமல் செய்தார்கள்.

ஆலயங்களில், நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனை தொழும் போது, அவர்கள் எந்த மாதிரியான துன்பங்களை எல்லாம் அனுபவித்தார்களோ  அப்படிப்பட்ட துன்பங்கள்  நீங்க.

யார் வந்து வேண்டினாலும் அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள் ,தன் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யவில்லை. நாயன்மார்களையும் ஆழ்வார்களையும்  அவர்களின் புகழை பற்றியும் இன்றும் பேசுகிறோம் என்றால் சுயநலமில்லாத இறைத் தொண்டு செய்ததனால் தான்.

நாயன்மார்களும், ஆழ்வார்களும் நாட்டில் எந்த இடத்திற்கு போனாலும், அந்த இடம் புனிதமடைந்து ஊர்மக்கள் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைந்தார்கள்.

மிகப் பழமையான ஆலயங்களில் இன்று சக்திமிக்க ஈர்ப்பு தங்களுடன் தான் இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் நாயன்மார்கள் சுகமில்லாமல் பாடிய பாடல் பெற்ற ஆலயங்களை இன்றும் நாம் காண்கிறோம், மக்கள் நலம் ஒன்றையே குறிக்கோளாக நினைத்து.

ஆலயங்கள் ஜீவ சமாதியான, ஜீவன் முக்தர்கள், சித்தர்கள், மகான்கள் தங்களுடைய எண்ணங்களை பிரபஞ்ச சக்தியுடன் இணைத்து இந்த புண்ணிய பூமியின் மீது வலம் வரச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஜீவன்முக்தர்களை கேவலப்படுத்துகின்ற செயல்களை ஆலயங்களில் எவன் செய்தாலும், அவன் வாழ்க்கையில் வீழ்ச்சி அடைகிறான்.

ஆலயங்களில் இறை தொண்டு செய்ய இறைவனை நமக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறான்.

சாதாரண மனிதனாக இருந்தவனை நற்பண்புகள்  உள்ள மனிதனாக மாற, தொண்டின் மேன்மையை உணராமல் இறைவனுக்கே துரோகம் செய்து, மீண்டும் பிறந்து கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கிறான்.

மூன்றாம் நிலையில் சிரசுக்கு மேலே உயர்த்திய நிலையில் பிரமிட் போன்ற முக்கோண வடிவம் உண்டாகும்.

பிரமிடுக்குள் வைக்கப்படும் எந்த ஒரு பொருளும் கெடுவதில்லை மாறாக அதிக சக்தி உடையதாக மாறுகிறது. இதை இன்றைய அறிவியல் உண்மை.

ஆலயங்களில் இறைவனை கிழக்கு திசை  பார்க்கும் படி பிரதிஷ்டை செய்து இருப்பார்கள்.

நாம் ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபடும் போது வடக்கு தெற்கு திசை நோக்கியே நிற்போம்.

வட துருவம், தென் துருவம் இடைப்பட்ட பகுதியில் மின் காந்த சக்தி அதிகமாக இருக்கும் என்பது அறிவியல் உண்மை.

நன்றி

ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்

மேலும் படிக்க…..

தானத்தில் சிறந்தது

 

 

 

Leave a Reply

Your email address will not be published.