கருவில் யோகம்

ஒழுக்க நெறிக்கு இழுக்கு வராமல், தர்ம நெறி தவறாமல் இறைவனை என்றும்  மறவாது நினைக்கின்ற பெண்களே  சீரிய கற்புடையவர்கள்  ஆவர்.

இறை அருளின் துணையோடு.

இறை ஆற்றலுடன் என்றும் இணைந்தே இருக்கும் பெண்  இறை அருளின் துணையோடு,  தன் கணவனுக்கு துணை நிற்பர். இதுவே  இல்வாழ்க்கையில்,  துணைவியின் சிறந்த குறிக்கோள் இறை அருளும், சிறப்பும் ஒருங்கிணைந்த வடிவங்களே பெண்கள்.

தன் துணைவருடன்  இணைந்து, தானும் சுகத்தை அனுபவித்து கொண்டு, தன் துணைவருக்கு ஈடு இணை இல்லாத, இன்பத்தையும், சுகத்தையும் ஒன்று சேர மகிழ்ச்சியுடன் அளித்து ஆனந்தம் அடைவர்.

இறைவனுக்கு இணையாக தன் கணவரையும்   பூசித்து இறை அருளுடன் கூடி, தெய்வ சிந்தனையுடன் தான் பார்க்கும் எந்த ஒரு பொருளையும் இறை சக்தி பொருந்திய பொருளாக மாற்றிவிடும் தன்மை உடையவள்.

தன் ஈன்றெடுத்த மழலைச்  செல்வங்களையும், தெய்வத் தன்மைக்கு மாற்றுவர்.

பெண் தாய்மை அடைந்து சிசு ஜனனம் ஆகும் வரை தன் வயிற்றில் சுமந்திருக்கும் சிசுவையே நினைத்து சதா சர்வ காலமும் இருப்பாள்.

ஒரு  பொருளையோ, வஸ்துவையோ  அல்லது  உடம்பின் ஒரு  பகுதியையோ மாறாத சிந்தனையுடன்  நினைத்துக் கொண்டு  இருப்பதை வாசியோகப் பயிற்சியிலே சம்யமம்  செய்தல் என்று சொல்வார்கள்.

வாசியோக தியானப் பயிற்சியில் ஆறு ஆதாரங்களையும் தனித்தனியே நினைத்து  (சம்யமம்)  பயிற்சியினை மேற்கொள்வர், வாசியோகப் பயிற்சி  பயிற்சி முறையும் இதுவே.

மேலும் படிக்க…..

ஏன் தியானம் செய்ய வேண்டும் ?

வாசிப்பயிற்சி ரகசியமே நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றிலே தான் இருக்கிறது. கருவில் இருக்கும் போதே வாசிப்பயிற்சி ஆரம்பமாகிறது. குழந்தை கருவில் வளர்ந்து வரும் நிலையில் தாயின் மூலமே உணவு மற்றும் காற்று தொப்புள் கொடியின் மூலம் கிடைக்கிறது.

குழந்தையின் அசைவுகள் மீது மனம் வைத்தாலே தியானம்.

கருவில் இருக்கும் குழந்தை வாய், மூக்கு வழியாக சுவாசிப்பதில்லை, தாயின் மூலமே எல்லா சக்திகளும் கிடைக்கிறது. கருவில் குழந்தை வயிற்றின் மூலமே சுவாசத்தை உள்ளே இழுத்து சுவாசிக்கிறது. வயிறு மட்டுமே சுருங்கி விரிகிறது.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு அதன் தாயினால்  அனைத்தையும்  உணர்த்த முடியும்.  குழந்தையின் அசைவுகள் மீது மனம் வைத்தாலே தியானம் தான், அப்படிப்பட்ட அசைவுகளை தாயின் மனம் விரும்புகிறது.

இப்படி தீவிரமாக ஒரே இடத்தில் மனம் நினைவு கொள்வதை சம்யமம்  என்று  சொல்வார்கள் இப்படி மனதை ஒரே இடத்தில் நிலைக்கச் செய்வதனால் மனம் தூய்மையடைகிறது.

தூய்மையான எண்ணங்களினால் தன் குழந்தைக்கு அனைத்தையும்  உணர்த்த முடியும் அதன் தாயினால்.

குழந்தை ஜனனம் ஆன உடன் அடுத்த பயிற்சி முறை ஆரம்பமாகிறது.  ஜனனம் ஆன குழந்தையின் முதல் கூவுதல், அழுகையே, வெளிக்காற்றை சுவாசிக்கவும், நுரையீரல் சுருங்கி விரியவும், உதவியாக இருக்கின்றது. பிராண வாயுவை,  ஏற்றுக்  கொள்ள குழந்தையின் உடல் தயாராகிறது.

தான் பெற்ற குழந்தை செல்வங்களை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும்.  என்ற கனவு ஒவ்வொரு தாய்க்கும் இருக்கும்.

இறை அருளுடன் கூடிய தாயின் கனவு,  தான் நினைத்ததைப் போல், மாற்றி விடும் சக்தி படைத்தது தாயின் எண்ணம், ( தன் குழந்தையையே நினைத்துக் கொண்டு இருப்பதால் (சம்யமம்)  எண்ணத்திற்கு சக்தி உண்டாகிறது.)

மகாபாரதத்தில் ஒரு காட்சி, ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா அர்ஜூனனின் மனைவி சுபத்திரையுடன்   பேசிக் கொண்டிருக்கும்  போது  வியூகங்களின் ரகசியங்களை சொல்வார்.

சக்கர  வியூகத்தைப்  பற்றிச் சொல்லும் போது  அதன் உள்ளே நுழைவது பற்றியும் மற்ற விவரங்களையும் சொல்லிக் கொண்டிருப்பார்.

அதில் மனம்  லயித்த சுபத்திரை உறங்க நிலைக்கு வந்துவிடுவாள் பரமாத்மாவின் இயல்பே பேசும் போது  தன் கண்களை மூடிக்கொண்டு சொல்கின்ற விஷயத்தை மனக் கண்ணால் காட்சிகளாக பார்த்துக் கொண்டு தான் விவரித்துச் சொல்வார்.

அவரின் இயல்பே அது தான். கண்மூடிக் கொண்டு பேசும் பரமாத்மா, உம் உம் என்ற சத்தத்தைக் கேட்டு கண் திறந்து பார்ப்பார்  அப்பொழுது தான் சுபத்திரை உறக்கத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து.

சக்கர  வியூகத்தில்  நுழையும் முறைகளைச்  சொல்லி உம்  என்று கருவில் இருந்து வரும் சத்தத்தைக் கேட்டு அதனுடன் நிறுத்திக் கொள்வார், பின்  நாளில் அந்த குழந்தையே  வீர  அபிமன்யூவாக பராக்கிரமங்களை செய்தவன். அர்ஜுனனின் மகன் சக்கர  நுழைந்து, மஹா அதிரதர்களால், கொல்லப்பட்டவன்.

பாலுடன் ஞானத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.

தன் குழந்தைக்கு பாலுடன் ஞானத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.  தாளாத தூக்கத்துடனும்,  கோபமும், குழப்பத்துடனும்  இருக்கும் நிலையில் குழந்தைக்கு பால்   ஊட்டக் கூடாது.

தூய சிந்தனையுடன், மகிழ்ச்சியும், நிறைந்த அன்புடன் இறைவனை நினைத்தே குழந்தைக்கு பால்   ஊட்ட வேண்டும்.

குழந்தை வளர்ப்பில், குழந்தைக்கு தேவையானதை உணரும் தன்மை தாய்க்கு உருவாகிறது.

குழந்தை சொல்லாமலேயே  உணரும்  தன்மை, தாய்மை அடைந்த பெண்களுக்கு இறைவன் கொடுத்த வரம், தாய்க்கும், சிசுவிற்கும் உள்ள உறவே தொப்புள் கொடி தான்.

ஆறு ஆதாரங்களில் இது மணிபூரகம். ஆனந்தன்  மேல் ஆனந்த சயனத்தில் இருக்கும் திருமாலின்  திரு உந்திக்  கமலத்தின்  மேல் அமர்ந்து  படைப்புத் தொழில் செய்வது பிரம்மன், பிரம்மன் படைத்த காத்தருள்வது.

திருமால் காக்கும் கடவுள்.  இருவருக்குமே நெருங்கிய தொடர்பு (தாய் – சேய் உறவு போல்) பிரம்மன் நினைப்பதை திருமால் அறிவார். திருமால் நினைப்பதை பிரம்மனும் அறிவார்.

வாசி யோக தியானப் பயிற்சியில் மேல் நிலைக்கு வரும் ஒவ்வொருவரும், மேல் ஆறு ஆதாரங்களையும், கீழ ஆறு ஆதாரங்களையும் தனித்தனியே  உணர்ந்து  (சம்யமம்)  அறிந்து கொள்வார்.

மேலும் படிக்க…..

தியான வழிபாடு சூட்சமமான ரகசியங்கள்

அப்படி ஆதாரங்களை தனித்தனியே பிரித்து அறிந்து, உணர்வதினால் ஒவ்வொரு  ஆதாரத்திற்கு ம் சூட்சமமான சக்திகள் உருவாகும்.

அப்படி உணர்தலில் கீழிருந்து மேலாக மூன்றாம்  நிலையாகிய மணிபூரகம். பௌதீக உடலை  விட்டு உயிர் வெளியேறும் வழியாகும்.

வாசி யோக தியான பயிற்சியில், பௌதீக  உடம்பினை விட்டு உயிர் சக்தியானது வெளியே வரும் வழியே மணிபூரகம், உடம்பினை விட்டு வெளியே வரும் உயிர் சக்தியானது.

அனைத்து காட்சிகளையும், அதன் உண்மை நிலைகளையும் அறிந்து கொள்ளும்,பாவ, புண்ணியம் என்ற இரண்டு நிலைகளை மட்டுமே தனக்குள் கொண்டிருக்கும் உயிர்சக்தி எல்லையில்லா பிரபஞ்சத்தில் காலநேரம் வேறுபாடுகளை கடந்து நிற்கும்.

சித்தர்கள், மகான்கள், யோகிகள், பாவ, புண்ணியங்களுக்கு அப்பாற் பட்டவர்களின் உயிர் சக்தியானது, பல ஆயிரம் வருடங்களாக வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. பிரபஞ்சத்தில்  வட்டத்தில் இன்றும்.

தொப்புள் கொடி உறவு.

தாயிடமிருந்து பிரிதலே  ஜனனம் ஆகும். ஜனனமான குழந்தை தான் தேவைகளை மன அலைகளாக  வெளிப்படுத்தும். 

அதை உணர்வால்  உணர்ந்து கொள்ள, அதீக்கத்தை முதலாகக் கொண்டு துரியத்திற்கு இடையில் உள்ள பகுதி, குழந்தையின் தாய்க்கு மலர்ந்து விரிகிறது. (இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.)

பிறந்த குழந்தையின் சிரசின் உச்சியில், மெலிந்து துடிப்புடன் இருக்கும், குழந்தையின் எண்ண அலைகள், தாயின் சிரசில் ஆதிக்கத்திற்கு இடையில் உள்ள மலர்ந்த பகுதிக்கு வந்தடையும். 

அதைக் குழந்தையின் தாய் உணர்வாள் கருவில் இருந்து சிசுவையே நினைத்து சம்யமம்  செய்ததினால் பிறந்த  குழந்தைக்கும், அதன் தாய்க்கும் உயிர் தொடர்பு உண்டாகிறது.

குழந்தைக்கு தேவையானதை உணர்ந்து கொள்ளும் தன்மை தகவல் பரிமாற்றம் நடைபெற இறைவனால் அளிக்கப்பட்ட மிக உயர்ந்த நிலையாகும்.

உலகில் ஈடு இணை இல்லாத தாய்ப் பாசத்திற்கு முதற்படியாக அமைகிறது. எல்லை இல்லா பேரன்பினால் மட்டுமே இதை உணர முடியும். யோகா பயிற்சியாளர்களுக்கு அன்பே சிவம் என்று கூறுவார்கள்.

மேலே சொன்ன ஆனந்த சயனத்திருக் கோலத்தில் இருக்கும் திருமாலுக்கும்,  திருஉந்தி (மணிப்பூரகம்) கமலத்தில் அமர்ந்து இருக்கும் பிரம்மனுக்கும் உள்ள தொடர்பின் ரகசியம் என்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

யோகப் பயிற்சியில் அடுத்தவர் மனம்  நிறையை உணரும் தன்மை, பல வருடங்கள் பயிற்சி செய்தவர்களுக்கே அமைவதில்லை, பத்து மாதம் கருவை சுமக்கும்.

பெண்ணிற்கு இறைவனால் அளிக்கப்பட்ட கொடை அல்லவா, அதனால் தான் தெய்வத்திற்கு நிகராக தாய்மையை போற்றுகிறோம். தாயே தெய்வமாகிறாள்.

தாயினிற் சிறந்த தெய்வமும் இல்லை

தாய்ற்   சிறந்த கோயிலும் இல்லை

நம்  இந்து மதத்திலே பதிமூன்று  வயது நிரம்பிய  சிறுவர்களுக்கு பிரம்மோ உபதேசமும்,  உபநயனமும், செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது.

உபநயனம், திரிநேத்திரம் என்று  சொல்வது நம் நெற்றிக்கண் ஆகினைச் சக்கரம் பூணூல் அணிவித்து, மந்திர உபதேசம் செய்து உபநயனம் என்றும் நெற்றிக்கண்ணைத் தூண்டிவிடும் நிகழ்ச்சியை அனுபவமுள்ள புரோகித ஆச்சாரியர்களைக் கொண்டு செய்வது வழக்கம்.

பிரம்மோ உபதேசமும்,  உபநயனமும் சிறுவர்களுக்கு செய்தித்தால்  அவர்கள் வளரும் காலங்களில், நல்ல ஞானம் பெற்றிருப்பார்கள், தியான பயிற்சியில் ஆக்கினை சக்கரத்தை உபநயனம் நெற்றிக்கண்ணை தூண்டிவிடுவது.

தான்  தீட்சையும்,  உபதேசமும்   அறிவியல் உண்மைகளை  ஆன்மீகமாக மாற்றி ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் நிகழ்ச்சிகளாக மாற்றி உள்ளார்கள். நம்முடைய முன்னோர்கள்.

கருவாகி பிறந்து நம் விடும் மூச்சுக் காற்றை அறிந்து ரிஷிகளின் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்ததை முனிவர்கள் அதை எளிமைப்படுத்தி மக்கள் உணர்ந்து அறிந்து கொள்ளும்படி விளக்குகிறார்கள்.

வாசி பயிற்சியின் மூலம் மாணவர்கள், கல்வியில், நல்லறிவில், ஞானம் பெற்று வாழ்க்கையை  வளமுடனும் நலமுடனும் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும்.

மரணத்திற்கு அஞ்சாத உயிர்கள்.

அதை எவன் ஒருவன் தன் வாழ்க்கையில் உணர்கிறானோ, அவன் இல்லறத்திலும், தூற த்திலும், மனிதர்களுக்குள்ளும்  உயர்ந்தவன் ஆகிறான்,பொன்  பொருள் உறவுகள் மீது,   பற்று இல்லாமலும்  தன் உயிர்  மீதும் பற்றி இல்லாமலும் அவன் மனம் இறை அருளை நாடுகிறது.

இல்லாததுமாய், இருப்பதுமாய்  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், இறைத் தன்மையில் தன்னை இணைத்துக் கொண்டு, இறையருளை  வேண்டியே தன் செயல்களையும், எண்ணங்களையும் முறைப்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் நித்திய இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அடைகிறான் இந்நிலையில்  மெய்  அறிவே  பிரம்மம் என்பதை உணர்கின்றான். 

நிலையான நிறைவான தன்மையை உணர்ந்து பேரானந்தத்தை அடைகிறான். பேரானந்தமே நித்தியமும், நிரந்தரமும், நிலையானதும், சத்தியமும் அதுவே இது தான் வாழ்க்கையில் என்றும் நிரந்தரமும்,  நித்தியமாய் இருப்பதும், அந்திம காலம் வரை இருப்பதும்  இது தான்.

மரணத்திற்கு அஞ்சாத உயிர்கள்,  இந்த பூமியில் எதுவும் இல்லை, எல்லா உயிர்களுக்கும் மரணம் என்பது  பயத்தை உண்டாகிறது.

மரணம் என்பது இருப்பதை இல்லாமல் ஆக்குகிறது. எந்த ஒன்றுக்கும் ஆரம்பம் என்று இருந்தால், அதற்கு  முடிவும் ஒன்று இருக்கும், முடிவைப் பற்றிய எண்ணம் நமக்கு வரவேண்டும்.

இந்த உடலில் உயிர் என்றும் நிரந்தரம் என்று நம்பிக்கை கொண்டிருக்கும் நிலை இல்லாததை நிலையாக இருக்கும் என்று நம்பி ஏமாற்றம் அடைகிறோம்.

நிரந்தரமாய் இல்லாதது  உயிர்,  அதுவே நிரந்தரம் என்று எண்ணிக்  கொண்டு வாழ்க்கையில் ஏமாற்றம் அடைகிறோம்.

எத்தனை பேர்கள்  இந்த உடம்பினை உலகத்தில் வைத்து விட்டு, உயிர் நீங்கிய நிலைமைகள் கண்  கூடாக  பார்த்தும் கூட, நம் மனம் நிரந்தரமாய் நம் உடலை உயிர் தாங்கும்  என்ற அறியாமையில் மனம்  நினைத்திருப்பதே,  மரணம் என்பது ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்டது. முடிவை வரவேற்கும் மனப்பக்குவமும் அதை ஏற்றுக் கொள்ளும் மனமும் வேண்டும். தன் முடிவை கண்டு அஞ்சு பவன் மனம் பேராசைகள் நிரம்பியது.

நன்றி

ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்

மேலும் படிக்க…..

தியானமும் உண்மையும்

 

 

Leave a Reply

Your email address will not be published.