பிராணவாயு நம் உடலில் உள்ள நாடுகளில் ஓடி மூளையினைச் சுற்றி மூளையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று பின் வெளியேறுகிறது. மூளையில் உள்ள அணுக்கள் எந்த ஒரு விஷயத்தையும் பதிவு செய்து கொள்கிறது. பிராண வாயுவை அதிகமாக மூளைக்குள் செலுத்துவதனால் புதிய ஆற்றலைப் பெறுகின்றது.
மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு.
பதிவு செய்து கொள்ளும் அணுக்கள் எல்லாம் புத்துணர்வுடன், சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் அனைத்து விஷயங்களையும் முழு ஆற்றலுடன் பதிவு செய்து கொள்கிறது.
அதற்கு மேல் பதிவு செய்து கொள்ளும் ஆற்றல் குறைகிறது. மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறையும் போது பதிவு செய்து கொள்ளும் ஆற்றலும் குறைகிறது.
அணுக்கள் தளர்ந்த நிலையில் இருக்கும் போது தான் கொட்டாவி வருகிறது. தேவையான அளவு பிராண வாயு மூளைக்குச் செல்லாததால் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும் போதோ படிக்கும் போதோ கொட்டாவி வருகிறது.
சிந்திக்கவும் முடியாமல், படிக்கவும் முடியாமல் கேட்கவும் முடியாமல் போகிறது. மூளையில் உள்ள அணுக்கள் தளர்வடைந்த நிலையில் இவை நடக்கும்.
வாசி யோகத்தின் மூலம் அண்ணாக்கில் காற்றை ஏற்றி ஏற்றி தியானப் பயிற்சி செய்து வர மனமும் (மூளை) உடலும், புத்துணர்வு பெறுகிறது. (
வாசியோகத்தில் மட்டுமே நேரடியாக பிராண வாயுவை மூளைக்குச் செலுத்த முடியும்) மூளை புத்துணர்வுடன் இருக்கும் போது மனம் பரந்து விரிவடைகிறது. பரந்த மனம் உண்டாகிறது. இது அறிவியல் உண்மையும் கூட.
இப்படி தொடர்ந்து பயிற்சி செய்து வருவதன் மூலம், நம் உடலைச் சுற்றி ஒளி உண்டாகிறது. இதையே ஒளிதேகம் என்று சொல்கிறோம். ஒளிதேகம் நம் உடலை நோய்கள் தாக்கா வண்ணம் காக்கிறது.
ஒருவன் தீய எண்ணம் கொண்டவன், கோபத்துடன் பேசுவான், அவன் உடலைச் சுற்றி ஆரஞ்சு வர்ண ஒளி தோன்றும், தூய்மையான எண்ணம் கொண்டவர்களின் ஒளி வட்டம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
எந்த ஒரு நோய்களும் உடனே வருவதில்லை. நோய்களை உண்டாக்கும் அணுக்கள் ஒளி தேகத்தில் அமர்ந்து மெதுவாக ஆக்கிரமிப்பு செய்து கொள்ளும், அந்தப் பகுதியை தன் ஆதிக்கத்திற்கு கொண்டு வந்து உடன் உடலின் உள்ளே ஊடுருவி அதன் செயல்களைத் தொடரும்.
நோய் சக்திகளை இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் சண்டையிட்டு எதிர்த்து விரட்டும், கொல்லும் அப்படியும் முடியாது போனால் அணுக்கள் மூலம் மூளைக்குத் தகவல் தெரிவித்துவிடும்.
அதன் பிறகே நமக்கு நோய் பற்றிய அறிகுறிகள் தோன்றும், புரியும், அதன் பிறகு தான் நாம் நோய் பற்றியே உணருவோம்.
மேலும் படிக்க…..
பிரபஞ்ச சக்தியின் வினைகளும் மகான்களும்
நம்முடைய உணர்வுகளை வாசி யோகத்தின் மூலம் மனதை தூய்மையாகவும், துல்லியமாகவும் வைத்துக் கொள்வதன் மூலம் வரும் நோய்களைத் தவிர்த்து வளமோடு வாழ முடியும்.
நமது மூளையில் உள்ள பதிவுகள்.
தச நாடிகளில் ஓடுகின்ற பிராண வாயுவினாலும், இரத்த ஓட்டத்தினாலும், ஏற்படுகின்ற மின் அதிர்வுகளால் நமது மூளையில் உள்ள பதிவுகள், தூண்டப்படுகிறது.
அப்படி தூண்டப்படும் நிகழ்வுகளையே மனம் என்றும் சிந்தனை என்றும் சொல்கிறோம்.
பொதுவாக தியானம் செய்ய அமர்ந்தவுடன் பல விதமான சிந்தனைகள், தியானம் செய்பவர்களுக்கு வரும்.
அப்படி வருவது மனம் ஒருநிலைப்படாமல் இருப்பதால் தான் என்று பலரும் சொல்வார்கள் ஆனால் உண்மை அதுவல்ல.
தியானத்தில் அமர்ந்த உடன் நமது மூளையில் உள்ள பதிவுகள் முன்னோக்கி வேகமாக ஓட ஆரம்பிக்கும், இந்த நிலை வருவதற்கு பல மாதங்கள் ஆகும், தொடர்ந்து தியான பயிற்சி செய்ய வேண்டும்.
ஒருவர் எந்த வயதில் தியானப் பயிற்சி ஆரம்பிக்கிறதோ அந்த நாள் வரை நிறைய விஷயங்கள் மூளையின் பதிவில் இருக்கும்.
கண்ணால் பார்த்தது காதல் கேட்டது படித்தது அறிந்த விஷயங்கள் சுயமாக சிந்தனை செய்த விஷயங்கள் இப்படி பல வருடங்கள் மூளையில் பதிவான விஷயங்கள் அத்தனையும்.
தியானப் பயிற்சி ஆரம்பித்த சில மாதங்கள் வரை பயிற்சி செய்யும் போது வேகமாக ஓட ஆரம்பிக்கும், அப்படி ஓடும் நிலையில் தான் மூளையின் பதவியில் உள்ள காட்சிகள்.
பார்த்தது, படித்தது, கேட்டது, அனைத்தும் மிக வேகமாக மாறி மாறி சம்பந்தமே இல்லாதது போல் மனத் திரையில் காட்சிகளாக ஓடும்.
உதாரணமாக ஒலி நாடாவில் பாடல்களை தயவு செய்து கேட்கிறோம், குறிப்பிட்ட அளவு வேகத்துடன் சுழலும் போது முழுமையான வார்த்தைகளாக டேப் ரிக்கார்டரில் கேட்கிறோம்.
அதே ஒலி நாடாவை வேகமாக ஓட வைக்கும் போது தெளிவில்லாத சப்தங்கள் மட்டுமே கேட்கும்.
தியானப் பயிற்சியின் ஆரம்ப நிலையில்.
அப்படி தியானப் பயிற்சியின் ஆரம்ப நிலையில் சில மாதங்கள் வரை மூளையின் பதிவில் உள்ளவை வேகமாக ஓடும், இது இயற்கையே வேகமாக ஓடும் ஒலி நாடாவில் வரும் சப்தம் போன்றே தெளிவில்லாத காட்சிகள் தான் மனத் திரையில் ஓடும், நம் மனம் ஓட்டமும் அப்படித் தான் இருக்கும்.
நமது மூளைக்கு பதிவு செய்து கொள்ளும் திறன் உதாரணத்திற்காக இரண்டு லட்சம் செய்திகளை பதிவு செய்து கொள்ளும், ஆயுள் முடியும் வரை என வைத்துக் கொள்வோம், நாம் தியானப் பயிற்சி ஆரம்பிக்கும்.
போது வயது முப்பது வயதுக்குள் அறுபதினாயிரம் செய்திகள் பதிவாகி உள்ளது மூளையில், மூளையில் இன்னும் ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் செய்திகள் பதிவு செய்யப்படாமல் இருக்கும்.
தியானப் பயிற்சியில் அமர்ந்தவுடன், பதிவு செய்யப்பட்ட பகுதிகள், முன்னோக்கி ஓட ஆரம்பிக்கும் பதிவு செய்யப்படாத பகுதிகள் மூளையில் வரும் வரை தேவையில்லாத எண்ணங்கள்.
நமக்கு தொடர்பே இல்லாத விஷயங்கள், படித்தது, கேட்டது, பார்த்தது என இவை எல்லாம் முடிந்த பிறகு தான், பதிவு செய்யாத பகுதிகள் வரும்.
அதுவரை அமைதியாக தியானப் பயிற்சியில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதன் பிறகு தான் அலைபாயாமல் நிலையாக இருக்கும். இதை பயிற்சியின் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மனம் என்று சொல்கின்ற மூளையில் வெற்றிடம் வரும் போது குருட்டுத் தன்மை ஏற்படும், தியானம் செய்யும் போது நாம் கண்களை மூடிக்கொண்டு இருந்தாலும் மூடிய நிலையிலேயே உற்றுப் பார்க்க வேண்டும்.
அப்பொழுது ஒளியும் தெரியும், இருட்டும் தெரியும் எப்படி?
பிரபஞ்சம், வானம், உச்சி, குன்று என சொல்வதெல்லாம், யோகப் பயிற்சியிலே சிரசையே குறிப்பது, எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் கண்டதற்கு (கழுத்து) மேலே இருப்பது அகண்டம் (பிரபஞ்சம்) உயர்ந்த இடத்தில் தோன்றுவதெல்லாம், உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதுவே மனம்.
கண்ணை மூடிய நிலையில்.
அகக் கண்ணால் பார்க்கும் காட்சிகளை புறத்தில் உள்ளவைகளை சான்றாகச் சொல்லி பாடல்ளாக பாடியிருக்கிறார்கள் சித்தர்கள், பாமரனும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.
மயில் தோகையை விரித்து ஆடும் போது, சிலிர்ப்பால் தோகையில் உள்ள வர்ணங்கள் அலை போல ஓடும், பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். கண்கள் மூடிய நிலையில் தோன்றும் ஒளியானது மயிலின் சிரிப்பால் தோகையில் ஓடும் வர்ண அலைகள் போன்று, தொடர்ந்து வேகமாக மேல் நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும், மயில் தோகையில் கலந்திருக்கும் பொன்னிறத்தை போல் ஒளியானது, கண்கள் மூடிய நிலையில் தோன்றும்.
ஒளியானது பொன் நிறக்கலவையில் ஓடி முடிவில், கருமை நிறமாக மாறி (குயிலின் நிறம் கருப்பு) இருட்டு தோன்றும். இந்த நிகழ்வையே வள்ளல் பெருமான் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள்.
அப்படி தோன்றும் காலத்தில் தான் நாம் மேற்கொண்ட தியானப் பயிற்சியின் மனப் பதிவுகள் இயங்க ஆரம்பிக்கும், அப்பொழுது தான் மனம் ஒரு நிலைப்படும், தியானம் பற்றிய பதிவுகள் மூளையில் பதிவாகும். அதன் பிறகே மனம் தெளிவாகும். தேவையில்லாத விஷயங்களை ஓடவிட்டு, ஓடி முடியும் வரை அமைதியாக பயிற்சியை தொடர வேண்டும்.
மனம் ஒருநிலைப்படும் இல்லையே என ஆதங்கப்பட வேண்டியதில்லை, சிறிது கால பயிற்சிக்குப் பிறகு தான் மனம் ஒரு நிலைப்படும். என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
புற உணர்வுகளை மட்டுமே நாம் புரிந்து கொள்கிறோம், உள் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை, முயற்சியும், பயிற்சியும் இருந்தால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும்.
அமைதியாக அமர்ந்து கொண்டு, கண் பார்வையை மேல் நோக்கி, ஆக்ஞனை என்னும் புருவ மத்தியில் பார்க்க வேண்டும், மேல் நோக்கிய பார்வையில் இருந்து கொண்டு, மூக்கில் வரும் சுவாசத்தை கவனிக்க வேண்டும். தொடர்ந்து கவனித்து வந்தால் மூக்கில் வரும் சுவாசம் நிமிடத்திற்கு பதினைந்து என்ற எண்ணிக்கையில் இருந்து குறைந்து விடும். மூச்சுக் காற்றுடன் மனம் உள்நோக்கி போகும். இப்படி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் உள் உணர்வுகளை உணரும் தன்மை உண்டாகும். உள் உணர்வுகளை மிகுத் துல்லியமாக உணர முடியும்.
மேலும் படிக்க…..
நம் உடலில் உள்ள எந்த ஒரு பகுதியையும் மனம் வைத்து உள் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம். மூளையில் வெற்றிடம் வரும் போது தான் மனம் ஒரு நிலைபடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் கற்றவனோ, கல்லாதவனோ, அவனுக்கு கல்வி, மொழி அல்லது தொழில் சம்பந்தமான பயிற்சி அளித்தால் அதில் அவன் நிபுணத்துவம் அடைகிறான்.
கடந்த கால நிகழ்வுகளை நினைக்காமலும், நிகழ் கால நினைவுகள் இல்லாமலும், மனம் இருத்தல் வேண்டும்.
வெற்றிடத்தில் செய்யப்படும் பதிவுகள் புதிய ஞானத்தைக் கொடுக்கும், அப்படிப்பட்ட பயிற்சி முறைகளை சிறு வயதில் கற்றுக் கொள்வதனால் கல்வியில், தொழிலில், மிகச் சிறந்த சாதனையாளன் ஆகிறான்.
குருகுலக் கல்வியின் சிறப்பே சிறு வயது முதலே அனைத்தும் கற்றுத் தரப்படுவது தான்.
சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் மொழிப் பிரச்சினை.
சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு மொழிப் பிரச்சினையே ஏற்பட்டதில்லை, நாடு விட்டு நாடு போய், மொழிப் பிரச்சனை இல்லாமல் எப்படி சமாளித்தார்கள் சித்தர்கள்.
மூளையில் வெற்றிடம் ஏற்படுத்திக் கொண்டு தான் சமாளித்தார்கள் இப்படிப்பட்ட பயிற்சி முறைகள் அனைவருக்கும் மிக அவசியமானது.
இந்தியத் திருநாட்டில் பிறந்த இராமத்தேவர் ஜெருசெலேம் நாட்டில் யாக்கோபு என்ற பெயரிலும், போகரும் காலங்கி நாதரும் சீன நாட்டிலும் வாழ்ந்து தமிழ்நாட்டில் சமாதி ஆனார்கள் என்பது சித்தர்கள் வரலாறு.
சித்தர்கள் தங்களுடைய ஆற்றல் மிகுந்த யோக சக்தியினாலே ஞான உபதேச தீட்சை தருகிறார்கள்.
சிரசின் மேல் சகஸ்ராரத்தில் கைவைத்து தங்களுடைய யோக சக்தியின் ஆற்றலை உள்ளே செலுத்தி, தங்களுடைய எண்ணங்கள் எல்லாம் இதுதான் என்று உணர்த்தினாலும், இதுதான் பொருள் என்று வார்த்தைகளாலும், உணர்த்துகிறார்கள்.
குருவின் உயிர் சக்தியின் தொடர்பு, தீட்சை பெறும் மாணவனுக்கு உண்டாகிறது.
அப்படிப்பட்டவர்கள் குருவின் சொல்லை ஆராய்ச்சி செய்வதில்லை, குரு என்ன சொல்கிறாறோ அதை செய்ய அவர்கள் தயங்குவதில்லை.
அதனால் தனக்கு துன்பம் வருமா என்றும் யோசனை செய்வதில்லை. குருவின் சொல்லில் பரிபூரண நம்பிக்கையுடன் இருக்கும்.
மாணவனுக்கு, குருவின் உயிர்த் தொடர்பால் பிரபஞ்ச வட்டத்தில் உள்ள மகான்கள், ரிஷிகள், சித்தர்களின் தொடர்பு தீட்சை பெறும் மாணவனுக்கு உண்டாகிறது.
அப்படிப்பட்ட தொடர்பால் அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களில் இருந்து தெளிவு பெறுகிறான்.
தீட்சை பெற்று சுயமாகத் தன்னைத் அதிர்வலைகளை உருவாக்கிக் கொள்ளும் முயற்சிகளால், மூளையில் மிருதுவான அதிர்வலைகளால் இருக்கும் ஆற்றல் உண்டாகிறது.
நிறைய கருத்துக்களை ஏற்றுக் (பதிவு) கொள்ளும் தன்மை மூளைக்கு உண்டாகிறது.
தியானப் பயிற்சியினால் பிரபஞ்ச வட்டத்தில் உள்ள பிரபஞ்ச சக்தி அலைகளை தானாகவே ஈர்த்துக் கொள்ளும் வலிமை உண்டாகிறது.
பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு உண்டாகும் போது அறிவு பேரறிவாகிறது. சாதாரண மனிதனின் முயற்சி சிற்றறிவாகிறது.
தூங்காமல் தூங்கும் நிலையில், பார்க்காமலேயே பார்ப்பதும், கேட்காமலே கேட்பதும், படிக்காமலே படிப்பதும், போகாமலே போவதும், சொல்லாமலே சொல்வதும், உணர்வில்லாமல் உணர்வதும் தான், இது எப்படி சாத்தியமாகும். மூளையில் வெற்றிடம் ஏற்படுத்திக் கொள்வதனால் சாத்தியமாகிறது.
எண்ணங்கள் எங்கு உதிக்கின்றதோ அங்கேயே முடியும், மனம் அடங்கும் வரை காத்திருக்க வேண்டும் மனதால், நிச்சயம் மனம் ஒருநிலைப்படும்.
நன்றி
ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்
மேலும் படிக்க…..