பிரபஞ்ச சக்தியின் வினைகளும் மகான்களும்

மனிதனின் உண்மை இயல்பே,  ஆனந்தம் ஆகும். இல்லாததை நினைத்து, இயல்பாய் இருக்கும் ஆனந்தத்தை மறந்து துன்பப்படுகிறான். ஒரு மரத்து பறவை போல்.

அறிந்தும், அறியாமலும், செய்தவைகளால் வரும் வினை.

ஒரே இனத்துப் பறவைகள் மரத்தில் கூடுகட்டி வாழ்ந்து வந்தது, இரு பறவைகள் வாழ்க்கையை சீராக நடத்தி வந்தது,

அதில் ஒரு பறவை மட்டும் கசப்பான பழங்களையே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தது,  இன்னொன்று நல்ல இனிப்பான பழங்களையே  சாப்பிட்டு உயிர் வாழ்ந்தது.

பறவைகளின் இயல்பே ஒரு பறவை  எந்த மாதிரியான உணவைத் தேர்ந்தெடுக்கிறதோ,  அதையே மற்ற பறவைகளும் உண்ணும்.

ஆனால் ஒரு மரத்துப் பறவையானது, ஒன்று மட்டும் கசப்பான பழங்களையே விரும்பியது.

இனிப்பான பழங்கள் இருந்தும், அந்தப் பறவைக்கு தெரியவில்லை. அது போல் மனிதன் பேராசையுடன் இல்லாததை இருப்பது போல் நினைத்துக் கொண்டு கசப்பான பழங்களை உண்ணும் பறவை போல், இன்பத்தை அறியாமலும், உணராமலும் மனிதன் துன்பப்படுகிறான்.

கடல் நீரில் வாழ்கின்ற மச்சத்தின் (மீன்) சிறப்பே தான் தானாய் இருப்பதே, கடல் நீரில் உப்பின் உவர்ப்பு தன்மை அதிகம்.

அப்படி  இருந்தாலும் மீனின் உடலிலே உப்பின் உப்புத் தன்மை இல்லை.

உவர்ப்பு  நீரிலே வாழ்கின்ற ஓர் உயிர், அதன் தன்மை மாறாமல் இருப்பது என்பது மிக வியப்புக்குரிய விஷயம், அப்படி துறவு வாழ்க்கையில் தனித்து லௌகீக வாழ்க்கையில் மனதை செலுத்தாமல், துறவறத்தின் நன்மைகளை உணர்ந்து  இருத்தல் வேண்டும்.

பாசி கொடிகளும், சேறும், சகதியும் நிறைந்த குளத்தில் தான் தூய்மையான தாமரை மலர்கள் முளைக்கின்றது. (பிறக்கின்றது)  தாமரை மலர்கள் சேற்றையும், பாசிக் கொடிகளையும் பற்றி கவலைப்படுவதில்லை.

குளத்தின் தன்மையைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, குளத்தின் தன்மைகளை ஏற்காமல் தனி சிறப்போடு, அதன் தன்மையிலேயே முளைக்கின்றது.

தாமரை மலரின் தூய்மை  ஒப்பில்லாதது தான் பிறந்த இடத்தை பற்றி சிறிதும் நினைக்காமல் இருப்பதனாலே தாமரைக்கு அது சாத்தியமாகிறது  அதே போல தான்.

வினைகள் மூன்று வகை, ஜென்ம  ஜென்மாந்திரமாய் தொடர்ந்து வருவது, உழ்வினை என்றும்,  பழவினை என்றும் முன்வினையை சஞ்சித வினை என்று  சொல்வார்கள்.

மேலும் படிக்க…..

தானத்தில் சிறந்தது

பிறந்து வாழும் காலங்களில் இன்று வரை அறிந்தும், அறியாமலும், செய்தவைகளால் வரும் வினைகளுக்கு பிராரார்ப்தம் என்று சொல்வார்கள். வரும் காலங்களில் செய்கின்ற  கர்மங்களினால்  வரும் வினைகளுக்கு  பின் வினை என்றும் ஆகாமியம் என்றும் சொல்வார்கள்.

பிராரார்ப்தம் வினைகளினாலும்,  முன் பிறவியில் செய்து கொண்ட சங்கல்பங்களினாலும், பிராரார்ப்த வினைகளை அனுபவிக்கத்  தகுந்தார் போல் பிறவியை உண்டாக்குகிறான் இறைவன், நல்வினைகளும், பிராரார்ப்த வினைகளும், சங்கல்பங்களினாலும், நிறைவேறாத  ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள.

நம் பிரார்த்தனையின் படியே பிறவி உண்டாகிறது. ஆகவே ஆசை பிறவிக்கு வித்தாகும் என்பது சித்தர்கள் வாக்கு நம்முடைய பேராசையை பிறவிக்கு வித்தாக மாறுகின்றது

ஞானம் நம் உள்ளே தான் உறங்கிக் கிடக்கிறது.

நல்வினைகள், தீவினைகள் இரண்டும் அவனவன் உயிரிலே தான் பதிவாகிறது. பிறந்து வாழும் வாழ்க்கையில் முன் வினைகளையும், பிராரார்ப்த வினைகளையும், தீர்த்துக் கொள்ளும்  ஞானத்துடன் தான் ஒவ்வொரு உயிரும் ஜன்னமாகிறது. வினைகளை தீர்த்துக் கொள்ளும் மிக உயர்ந்த ஞானம் நம் உள்ளே தான் உறங்கிக் கிடக்கிறது. அதை எழுப்பி  பயன் படுத்திக் கொள்ள நாம் முயற்சிப்பதில்லை. மிக அல்பமான விஷயங்களிலே  தீவிரமாக மனதை செலுத்துகிறோம்.

இருக்கும் வினைகளைத் தீர்த்து கொள்ளாமல், தீர்வதற்கான முயற்சியும் செய்யாமல்,  நித்ய கர்மாவினால் வினைகளை சேர்த்து கொள்கிறோம்.

எந்த ஊழிக்காலத்தில் இந்த உயிர் மனிதனாக உருப்பெற்றதோ அன்றே வினைகளைத் தீர்த்து கொள்ளும் ஞானமும் உண்டானது என்பதை உணராமல் சுய நலத்திற்காகவும்,  பொறாமையாலும்  தவறான கருத்துக்கள் கொண்டவர்களுடன் துணை  போவதாலும், தகாத உறவுகளினாலும்,  வருகின்ற வினைகளை  அறிய முடியாமல் போகிறது.

தன் உயிரிலே பதிவான சஞ்சிதம், பிராரார்ப்தம், ஆகாமியம்  என்ற மூன்றுவித கர்ம வினைகளையும் ஞானிகள், மகான்கள், சந்யாசிகள்  எப்படி வினைகளைத் தீர்த்து கொள்கிறார்கள்.

நியாய,  நியமங்களுடன்  இருக்கும் இவர்களை, ஏளனப்படுத்தினாலும், இழிவாகப்  பேசினாலும் நடந்து கொண்டாலும், அப்படி யார் செய்கிறார்களோ அவர்களால் ஞானிகள், மகான்கள், சந்யாசிகள் வினைகள் தீர்க்கிறது. அவர்களது வினைகள் கேவலமாக பேசுபவனிடமும் நினைப்பவவனிடமும் போய் சேர்கிறது.

மகான்கள், பிராரார்ப்த வினைகளினால் வருகின்ற நோய்களைக் கூட மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அதை தண்டனையாக கருதி நோய்களை நிவர்த்தி செய்து கொள்வதில்லை.

உடலை வருத்தி தான் வினைகளை தீர்த்து கொள்கிறார்கள்.

உயிரிலே பதிவான வினைகளை வாசி யோக தியான பயிற்சி மூலம் குண்டலினி சக்தியாகிய  மூலாதார கனலை உயிருடன் கலப்பிக்கச்  செய்து, உயிரிலே பதிவான வினைகளை மூலக்கனல் பொசிக்கி அதன் சக்தியை குறைத்துக் கொள்கிறார்கள் ஞானிகள்.

பிரபஞ்சம் மனிதனுக்கு வெளியே உள்ள சக்திகள்.

இப்புவியின் மீது மனிதன் வாழ எல்லா வகையிலும் நிறைவை ஏற்படுத்தி உள்ளது பிரபஞ்சம் மனிதனுக்கு வெளியே உள்ள சக்திகள், பூமியில் மனிதன் உயிர் வாழவும், நடந்து செல்லவும், உணவு சாப்பிடவும், சாப்பிட்ட உணவை ஜீரணிக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க…..

தியான வழிபாடு சூட்சமமான ரகசியங்கள்

மனிதனுக்கு உள்ளே  இருக்கும் சக்திகள், சிந்தனை செய்யவும், கண்  இமைகளை இமைக்கவும் ,தற்காப்பு உணர்வுகளை உணர்த்தி வழி நடத்துகிறது. மனிதனின் உடல் இயக்கங்களுக்கு பிரபஞ்ச சக்திகளே ஆதாரமாய் உள்ளது.

மனிதனின் மனதில் தோன்றிய எண்ணங்களை நிறைவேற்றி கொள்ளும் விவேகமும், தனக்கு ஏற்படும் ஆபத்துக்களை அறிந்து கொள்ளும் உள் உணர்வுகளால் உணரும் ஞானமும், பிரபஞ்ச சக்திகளால் தான் உண்டாகிறது.

மனிதன் தன் உடலையும், மனதையும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்ச சக்தியினால் ஆட்சி செய்து கொள்கிறான்,

மனிதனுக்குள் இருக்கும் மகத்தான சக்திகள், பேராசைப்படுத்தினாலும்,  கோபப்படுவதினாலும் வெளிப்பட்டு வீணாகிறது,  நவகிரகங்களின் அசைவுகளினாலும், அதன் ஒளிக்கதிர்களினாலும்மனிதனின் மனதை இயக்குகிறது.

கிரகங்களின்  சுழற்சியின் தன்மைகளால் உண்டாகும், ருது காலங்களினால்  நன்மையை உண்டாக்குகிறது. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ப மனதை மாற்றிக் கொள்ளும் தன்மையும், கிரகங்களின் சுழற்சியே காரணமாய் அமைகிறது.

பிரபஞ்ச சக்தியோ என்றும் மாறாமல்,  அதற்கு உட்பட்ட  நியதியுடன் தான் இருக்கின்றது.  மனிதனை இயக்கும் உயிர் பிரபஞ்ச சக்தியினால் என்றும் அழியாமல் இருக்கின்றது, நவகிரகங்களின் கட்டுப்பாட்டில்   இயங்கும் மனமும், உடலும் அழிந்து போகிறது.

 பிரபஞ்சத்தில் இருக்கும் சக்திகள் அனைத்தும் மனித உடலிலும் உள்ளது என்பது சித்தர்கள் வாக்கு. அதை தியான பயிற்சியின் மூலம் உணரும் போது பிரமிப்பும் வியப்பும் அடைகிறோம்.

கிரக மாற்றங்களினால் உண்டாகும் ருது காலங்களைப் போல், மாறுபாடுகளை அறிந்து, உடம்பினுள்ளே ஓடித்திரியும் உயிர் மூச்சுக்காற்றை தன் வசப்படுத்தி அதனால் உண்டாகும்  நன்மைகளை வாசி யோக தியான வழிபாடுமுறைகளால் சித்தர்கள் நமக்கு அளித்துள்ளார்கள்.

சர்வமும் வியாபித்து  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், பிரபஞ்ச சக்தியே பிராண சக்தியாக மனிதனுக்குள்ளும் உள்ளது.

வாசியோக மூச்சு பயிற்சியின் மூலம் உணர்ந்து.

மனம், உடல், இயக்கங்களை கட்டுப்படுத்தும் முறைகளை, வாசியோக மூச்சு பயிற்சியின் மூலம் உணர்ந்து, உயிர் மூச்சுக் காற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் பிரபஞ்சத்தில் உண்டாகும் மாற்றங்களை அறிந்து கொள்ளும் ஞானம் உண்டாகிறது.

யோக வழிபாடு நெறி முறைகளால் மனிதனுக்கும் வளிமண்டலத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளால் இது சாத்தியமாகிறது.

மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை மெய் ஞானத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம் இயற்கையில் மனிதனுக்கும், பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை ஒன்றென உணராமல் பிரித்துப் பார்க்கிறோம்.

 அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது.

 இரண்டும் ஒன்றெனத் தெரிந்தவனே ஞானியாகிறான்

 அண்டம் – உலகு, பிண்டம் -உடல்.

 ஞானிகள், தங்கள் யோக சக்தியினால் வினைகளின் முடிச்சை அவிழ்த்து, பிடித்து பிசைந்தும் வேருடன் களைந்து விடுகின்றனர்.

நாம் சாதாரண மனிதர்கள் தானே நம்மால் என்ன செய்து விட முடியும் என்று நினைக்காமல் நம்மாலும் முடியும் என்ற எண்ணமும், முயற்சியும் தேவை முயற்சி திருவினையாக்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

முயற்சி செய்தால்  அரைபலனாவது  கிடைக்கும் அதிலிருந்து முன்னேறிவிடலாம். முயற்சியே இல்லாமல் எல்லாம் நடக்கும் என்பது அறியாமை.

கர்ம வினைகள் எல்லா  மனிதர்களுக்கும் உள்ளது. மகான்கள், ஞானிகள், சன்யாசிகள், வரை கர்ம வினைப்பயன்களை ஒவ்வொருவரும் அவரவர் விதிப்படி வினையை அனுபவிக்கிறார்கள்.

தர்ம நியாயங்கள் படி நியதியாக ஒருவர் நடந்து கொண்டாலும் அப்படிப்பட்டவர்களையும் கேவலப்படுத்துபவர்களும்  இருக்கிறார்கள். பற்றற்ற நிலையில் இருப்பவர்களையும், கேவலப் படுத்துவர்களும்  இருக்கிறார்கள்.

மகான்கள்  ஞானத்தில் மேம்பட்டவர்கள்.

இப்படிப்பட்ட இழிவு  சொல்களை  அவர்கள் கண்டு கொள்வதில்லை. கேட்பதினாலும் அவர்கள் மனம் சஞ்சலப் படுவதில்லை. 

நற்பண்பாளர்களை  தரக் குறைவாக நினைப்பவர்கள் மூடர்கள், அப்படி தரக்குறைவாக நினைப்பவர்களால்  தான்மகான்களுக்கு  உள்ள பூர்வ ஜென்ம வினை பயன்கள் தீர்கிறது.

மகான்களை இழிவாகப்  பேசுபவனையும்,  நினைப்பவனையும் போய்ச்  சேர்கிறது வினைகள், இப்படியாக மகான்களின் பூர்வ ஜென்ம வினைகள் தீர்த்து வினையற்றுப் போகிறது.

பாவம் புண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மகான்கள், அவர்கள் பாவ புண்ய செயல்களை  செய்வதில்லை நடுநிலையாக இருப்பார்கள்.

வாழ வழி இல்லாதவர்களையும்,  ஏழ்மையில் இருப்பவர்களையும், யாசகம் கேட்பவர்களையும்,  உடல் வலு இல்லாமல் இருப்பவர்களையும்.

நோய் உள்ளவர்களையும், ஆசார   அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பவர்களையும் ஏளனம் படுத்தக் கூடாது. அப்படி செய்பவர்களுக்கு ஏளனப்படுகிறவர்களுடைய வினைகள், கேவலமாக பேசுபவனையே போய்ச் சேரும்.

மகான்களை  கேவலப்படுத்துபவன்   நாயாய்ப் பிறந்த பின் அற்பப் புழுவாய் அல்லால் படுவான் என்பது திருமூலர் வாக்கு.

வசைபாடி  நிந்தனை  செய்பவன், ஞானிகளின் வினைகளை அப்பொழுதே பெறுகிறான், ஞானியை வந்தனை செய்து புகழ்கின்றவனுக்கு அவன் செய்த வினைகள் தீர்கிறது.

ஞானியை மூடன் சந்தித்தால், வசை பாடினால் ஞானியின்  வினைகள் மூடனைச் சேர்கிறது,  ஞானியை சந்திக்கும் பண்பாளன், தூய எண்ணம் கொண்டவன், அறத்தால் மேம்பட்டவன், வஞ்சனை இல்லாதவன் கடுஞ் சொல் பேசாதவன்.

இவர்களிடையே தூய சக்திகள் ஞானியைச் சார்கிறது, காந்தத்தின் முன் வைக்கப்பட்ட  இரும்பினைப் போல், மகான்கள், ஞானிகளின் அதீத ஆற்றலின் நம்முடைய சக்திகள்  ஐக்கியமாகி விடுகிறது.  இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருவர் மனமும் அறியாமலேயே நடைபெறுகிறது.

அப்படிப்பட்டவர்களை சந்தித்துப் பேசி, வெளியே வந்தவுடன் நம் உடலும், மனமும் தளர்வடைந்து மிகவும் இலகுவாய் இருப்பதை போல் உணரலாம்,  ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வுகளை உணராதர்களே அதிகம்.

நான் அந்த மகானை தரிசனம் செய்து விட்டு வந்தேன், என் மனம் உடல் பாரமெல்லாம் குறைந்துnவிட்டது,  அவர் மிக்க சக்தி படைத்தவர் என்றெல்லாம் புலம்புவோம் இதன் உண்மை புரியாமல்.

பூர்வ வினைகளும், கர்ம வினைகளும், அவனவன் உயிரில் தான் பதிவாகிறது, நற்பண்புகளுடன் பிறக்கும், உயிர், பூர்வ வினைகளையும், கர்ம வினைகளையும், அதன் உண்மைகளை உயிரானது உணர்த்தி எச்சரிக்கை செய்கிறது. அதை மனம் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது.

மனம் உள்ளுணர்வுகளாக நம்மை எச்சரித்தும், அந்த உணர்வுகளை நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை, தன்னை அறிதல் உணர்தல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியமாகிறது.

சுயசிந்தனையை சுலபமாக்கித் தருவது தியானப் பயிற்சியே  தியானப் பயிற்சியின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்து மறைபொருளாய், இருக்கும் பிரபஞ்ச சக்தியின் தொடர்பு உண்டாகிறது.

பிரபஞ்ச சக்தியின் தொடர்பினால் உள்ளுணர்வுகளின்  மூலம், வினைகளின் உண்மைகளை அறிய முடிகிறது.

தெளிந்த ஞானமும் நற்பண்புகள் பெற்று உயிரானது வினைகளை தீர்த்து, தூய ஆத்மாவாக மாறி உயிரில் களங்கமில்லாமல்,  பூரணமாகி, இந்த உயிர் எங்கிருந்து உருவானதோ அதே சக்தியுடன் மீண்டும் இரண்டறக் கலந்து மீண்டும், பிறவாமல் மேன்மை அடைகிறது.

நன்றி

ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்

மேலும் படிக்க…..

வாசி யோகத்தின் தியானமும் காயகல்பமும்

 

Leave a Reply

Your email address will not be published.