தானத்தில் சிறந்தது

தானங்களில் சிறந்தது அன்னதானம்  அதனினும் சிறந்தது கோதானம், அதனினும் சிறந்தது  சொர்ண  தானம்.

வளர்க்கும் வழி தெரிந்தவராக இருக்க வேண்டும்.

மூன்று தானங்களும் சிறப்புடையதாக இருந்தாலும் கோ தானம் பெறுவர், அதை பராமரிக்கும் முறை தெரிந்தவராக,  வளர்க்கும் வழி தெரிந்தவராக இருக்க வேண்டும். 

பராமரிக்க  முடியாமல் அந்த ஜீவனை கஷ்டப்படுத்துவானாகில்  அதனால் உண்டாகும் பாவம் தானம் கொடுத்தவரையே வகையைச் சேரும்.

அதனால் தான் பாத்திரம் அறிந்து பிச்சையிடு, கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள், பெண் கொடுப்பதும் தானம் தான், கன்னிகா தானம். 

கண்ணிக தானம் பெற்றவர், பெண்ணை கண்கலங்காமல் மகிழ்ச்சியாக வாழ்க்கை  நடத்துவானாகில்  பெண்ணை தானம் கொடுத்தவர் மார்  தட்டிக் கொள்ளலாம்.

அதே பெண் கண்கலங்கி  துக்கம் தாளாமல் பெரியவர்களிடம் வந்து நின்றால் அவர்கள் மனம் என்னபாடுபடும்.

மனிதன் தன் குறைகளை வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறான். நாற்கால் ஜீவனோ,  நன்றாக இருந்த என்னை இப்படி ஆக்கிவிட்டார்களே  என வருந்தும், அதன் வருத்தமே பாவமாக மாறி தானம் கொடுத்தவரையே   சேரும்.

சொர்ண தானம் என்பது,  விலை உயர்ந்த பொருள், நம்மிடமும் உள்ளது என சந்தோஷப்படலாம், தகாத எண்ணங்களை உருவாக்கும், அதனால் துன்பமே அதிகரிக்கும்.

அன்ன தானம் என்பது அப்படி இல்லை விரும்பியவர்கள் அனைவருக்கும் கிடைக்கும். பாமரன் முதல், பண்டிதன் வரை விரும்பியவர்கள் உண்ணலாம்.

ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான அளவு மட்டுமே உணவுகளை சாப்பிட முடியும், அதற்கு மேல் சாப்பிடச்  சொன்னாலும் சாப்பிடமாட்டார்கள்.

போதும், போதும், என்று சொல்ல வைப்பதும் இது தான்,  பேராசை நிறைந்த மனித வாழ்க்கையில் போதும் என்று மனப்பூர்வமாக சொல்வது இது மட்டும் தான்.

பசியால் உயிர் துடிப்பது மிகக் கொடுமையானது அதனால் உண்டாகும் பாதிப்பு, உடலில் ஏற்படும் மாற்றங்களால், மனதையும் உடலையும் பாதிக்கிறது.

மேலும் படிக்க…

வாசி யோகத்தின் தியானமும் காயகல்பமும்

உடலை வருத்தித்  தனக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறது உயிர், உயிருக்கு தேவையானதை கேட்டு வாங்கிக் கொள்கிறது உடல், இந்த உடலுக்கு எது தேவையோ, எந்த சக்தி குறைவாக உள்ளதோ, அதை ரத்தத்திலுள்ள அணுக்கள் மூலம், மூளைக்கு தகவல் தெரிவிக்கும்.

மூளையில் பதிவில் உள்ள இருப்பு.

குறைந்து உள்ளதா இல்லையா, என தகவல் தரும் (உணர்த்தும்)  இன்னதைச்  சாப்பிட்டால் இருப்பில் குறைந்துள்ள சக்திகள் இருப்பில் சேரும் என்பதை மூளையின்  பதிவுகள் எண்ணங்களாக வெளிப்படும்.

அந்த சுவையை விரும்பிச் சாப்பிடுகிறோம். இது சராசரி மனிதனுக்கு மட்டும் தான். பசியின் தன்மை   உணர்ந்தவர்களே   சிந்திக்கிறார்கள் சாதிக்கிறார்கள், பசியோடு இருப்பவனுக்கே  மூளை அதிகமாக வேலை செய்கிறது.

பசியில்லாமல் உண்பவனுக்கு மூளை மந்தகதியில் தான் வேலை செய்யும், இந்த உடலுக்கு தேவையான சக்திக்கும், உயிர்  துடிக்காமல் இருக்கும் அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

பல பேர்கள் சாப்பிடக் கூடிய உணவை ஒருவனே சாப்பிட்டு உணவை பலமாக்கும் எந்திரமாக இந்த உடலை வைத்திருக்கக் கூடாது. தேவைக்கு அதிகமாக யார் சாப்பிட்டாலும், ஆயுள் குறைவு, அளவோடு சாப்பிடுவர்களுக்கு எந்த நோயும் அணுகாது. 

 மூன்று வேளை உண்பவன் ரோகி

 இரண்டு வேளை உண்பவன்  போகி

 ஒரு வேளை உண்பவன் யோகி

 என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அண்டம்  (உலகு),  பிண்டம் (உடல்), உண்டி (உணவு).

ஒவ்வொரு சராசரி மனிதனும் தன் வாழ்க்கையில் நவரசங்களையும் உணர்வால் உணருகிறான் தனக்குள் உண்டாகும் நவரச உணர்வுகளை மனப்பூர்வமாக அனுபவித்துக்  கொள்கிறான். நவரச  உணர்வுகளால் உடம்பின் உள்ளே உண்டாகும் ரசாயன மாற்றங்களே  பௌதீக உடலைக் காக்கிறது.

நவரசம் என்பதை வீரம், கோபம், சாந்தம், அச்சம், வெறுப்பு, நகைச்சுவை, சோகம், காமம், என நவரச  உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படுகிறது. அப்படி இல்லாமல் நவரச உணர்வுகளில்  ஒரு சிலதை மட்டும், உணர்ந்தவர்களுக்கு உடலைக் காக்கும் ரசாயன மாற்றங்கள் நிகழ்வதில்லை. மருத்துவத்தில் மருந்தில்லா வியாதிகள் இவர்களுக்கு மட்டுமே  வருகிறது.

ஒருவன் எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும் அவன் தன் இயல்பான குணங்களுடன் தான் வாழ்கிறான், சிரிக்கவோ, துக்கப்படவோ, சந்தோஷப்பவோ,  தன் வாழ்க்கையில் அனுபவித்து உணர முடிவதில்லை, தன் வாழும் வாழ்க்கை முறையினாலும்,  மற்றவர்களின்  உணர்வுகளை உணரும் மனோபாவம்  இல்லாததினாலும் அப்படிப்பட்டவர்களுக்கு  இனம் கண்டு கொள்ள முடியாத வியாதிகள் வருகிறது.

உதாரணமாக  துக்கப்பட்டு  அழுகையால் வரும் கண்ணீர்  உவர்ப்பாய்   இருக்கும் மூக்குத்  தண்டின் அருகே  வழிந்து வருவது, ஆனந்தத்தாலும், மகிழ்ச்சியால் சிரிப்பதால் வரும்  கண்ணீர்,  காது  பக்கமாய் வரும், இப்படி வரும் கண்ணீர் உவர்ப்பாய் இருக்காது இனிப்பாக இருக்கும். இரண்டும் கண்களில் இருந்து தான் வருகிறது.

ஆனந்தத்தால் வரும் கண்ணீருக்கும், துக்கத்தினால் வரும் கண்ணீருக்கும் நிறைய வித்தியாசம்  உள்ளது. இது கண்களுக்கு வெளியே வருவதனால் வித்தியாசத்தை உணருகிறோம். மனம் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது  நம் முன்னோர்கள் அனுபவித்து சொன்னது, மனம் விட்டுச் சிரித்தால் முகத்தில் உள்ள நரம்புகள் வலிமை பெற்று முகம் பொலிவுடன் தோன்றும். முகத்தில் சுருக்கம் வராது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

என்பது  பழமொழி அகம் உள்ளம். உணர்வுகளுக்கு ஏற்ப  உள்ளத்தில் உண்டாகும் இரசாயன மாற்றங்களே  முகத்தில் பிரதிபலிக்கிறது மனம் விட்டு சிரிக்கும் போது முகம் மலர்களைப்  போல் மலர்கிறது.

மனதில் ஏற்படும்  பூரிப்பு கன்னங்களை  சிவப்பாக்குகிறது. இந்த மாற்றம் உடனுக்குடன் எப்படி நடைபெறுகிறது.

வியப்புக்குரிய ஒரு சம்பவம் நிகழ்ந்ததை பார்த்தவுடன் பார்ப்பவரின் முகத்தில் வியப்புக்குரிய மாற்றம் முகத்தில் தெரிகிறது.

அவர்கள் முகத்தைப் பார்த்தவுடன், ஏதோ காணாததைக்  கண்டு விட்டவன் போல் பார்க்கிறாய் என்று சொல்வது உண்டு.

மனம் நல்ல தெளிவுடன் இருக்கும் பொழுது பார்ப்பவர்களை கவரும் பிரகாசம் முகத்தில் தெரிகிறது. துக்கமான நிகழ்வுகளைப் பார்க்கும் போது முகம் சுருங்கி விடுகிறது.

அவர்கள் முகத்தைப்  பார்த்தவுடன்  ஒரு  துக்கமான விஷயத்தைச் சொல்ல வருகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

கோபப்படும் போது  உடலில் ஓடும் ரத்தம் எல்லாம் முகத்திலே வந்து சேர்ந்தார் போல் சிவப்பாக மாறி விடுகிறது. அதைப் பார்ப்பவர்களுக்கு பய உணர்வு உண்டாகிறது.

பயத்தால் முகம்  வெளிரி எந்த உணர்வுகளுக்கும் இல்லாமல் இருக்கும் முகத்தைப் பார்த்தவுடன் இவன் எதையோ பார்த்து பயந்து விட்டான் என்பதை புரிந்து கொள்கிறோம்.

மேலும் படிக்க…         

கருவில் யோகம்

குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் பொழுது நம் மனம் அடையும் சந்தோஷத்திற்கு  எல்லையே இல்லை என்று சொல்லலாம். நம் மனம்  குழந்தையின் மனதுடன் ஒன்றி விடுகிறது.

இதையெல்லாம் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இறை வழிபாட்டினால் மனம் மிருதுவாகி முகத்தில் சாந்தமும், பொலிவும் உண்டாகிறது. இந்த மாற்றங்கள் நம்முடைய  மனதிற்கும், உள்ளத்திற்கும் மிக அவசியமானது  தான்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளால் உடனுக்குடன் மாறும் முகபாவங்கள் உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்களினால் தான் ஏற்படுகிறது. இந்த மாற்றங்களே உடலைக் காக்கும் அருமருந்தாகிறது. ஆனால் உயிரைக் காக்கும் உபாயம் ஆகாது.

ஒருவர் தானம் கொடுக்கும்போது கொடுப்பவரின் முகம் பிரகாசமாக இருக்கும். உள்ளம் உவந்து மனப்பூர்வமாய் செய்வதினால் முகத்தில் பிரகாசம் உண்டாகிறது.

அன்பும், கருணையும் உள்ளத்தில் உண்டாகும், உணர்வுகளாய் முகத்தில் வெளிப்படுகிறது.

யார் ஒருவர் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி அவர்களுடைய சந்தோஷத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறாறோ அவரே மனிதரில் உயர்ந்தவர் ஆகிறார்.

மற்றவர்களின் சந்தோஷத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதே யோகத்திலும் உயர்ந்தது. அப்படிப்பட்டவர்கள் பல வருடங்கள் தியானப் பயிற்சி செய்ததனால் உண்டாகும் சக்தி அவருக்கு கிடைக்கப் பெறுகிறது.

நவரச உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். உடம்பின் உள்ளே உண்டாகும் மாற்றங்களை உணர முடியாத அவர்களையும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளவர்களையும் உபநிஷத்துகள், தயை இல்லாத மனிதன் என்று சொல்கிறது.

மனப்பூர்வமாய் மற்றவர்களுக்கு கொடுத்து,  அதனால் உண்டாகும் மகிழ்ச்சியும், ஆனந்தமும்,  நவரச உணர்வுகளிலேயே  மிக உயர்ந்தது, இந்த உணர்வுகளால் உண்டாகும் ரசாயன மாற்றங்களே  உடலை காக்கும் அருமருந்தாகிறது.

மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, அவர்களுடைய சந்தோஷத்தை பார்த்து ஆனந்தப்படுபவனுக்கு எந்த நோயும் வருவதில்லை பிரதிபலன் எதிர் பார்த்து  செய்வது தர்மம்.

எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வது தானம். தான, தர்மங்கள், தலைகாக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது  நம்  நன்மைக்காகவே.

அறிவில் பண்பட்டவர்கள் யோகிகள், எதையும் விரும்பமாட்டார்கள், எந்த நிலையிலும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் இருப்பவர்கள், அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வேளை பகல் உணவு அளித்தாலே போதும், மனநிறைவோடு அவர்கள்  செய்யும் ஆசீர்வாதம், அன்னதானம்  செய்தவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அவர்கள் வம்சத்திற்கே பக்கபலமாக இருக்கும்.

ஞானிகளின் ஆசீர்வாதம்.

ஒரு தலைமுறைக்கும், மகான்களின் ஆசீர்வாதம் ஏழு தலைமுறைக்கும் தொடர்ந்து வரும், செயற்கரிய செயலை செய்பவரே  மிகப்பெரியோர், தன்னை அறிந்தோர் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. தன்னை அறியாதோர் சிறியோர், அவர்களே பகட்டுடன்  அனைத்தும் அறிந்தவன் போல் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

 அன்ன தானத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத எத்தனையோ  பேர்கள், அதில் கலந்து கொள்வார்கள் அவர்களின் அடையாளத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது, வெறும் ஆடம்பரத்தையும், அலங்காரத்தையும் பார்த்து மயங்கிவிடுகிறோம். அறியாமையாலேயே  அப்படிப்பட்டவர்களுக்கு நாம் மரியாதை செய்கிறோம். மிகச் சாதாரண தோற்றத்தில் உள்ள பெரியோர்களை  நம் உணர்வுகளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வெளியே ஆடம்பரமாக  உள்ளவனைப்  பார்த்து அவன் உண்மை நிலை, என்ன என்பதை உணராமல் நாம்  மயங்கிவிடுகிறோம். இப்படிப்பட்ட எண்ணங்களால், உணர்வுகளால், தன்னை அறிந்த பெரியவர்களைக் காணமுடியாது.

நாம் உண்மைக்கு என்றும் மரியாதை தருவதில்லை, அதனால் உண்மை நம் கண்களுக்கு தெரிவதில்லை புரிவதில்லை உண்மையை உணரும் ஞானமும் அறிவும், நமக்கு இல்லை என்பதே உண்மை புறத் தோற்றத்தை வைத்தே நாம் ஒருவரை மதிக்கிறோம் மரியாதை செய்கிறோம்.

ஞானம் இல்லாதவன்  ஞானிகளுக்கும், பெரியோர்களுக்கும் அன்னதானம் செய்ய நினைத்தால், உண்மையான ஞானிகள், பெரியவர்கள் எப்படி அவன் கண்களுக்குத் தெரிவார்கள்.

அன்னதானம் என்பது மூன்று வேளை  செய்வதில்லை.

பகலுணவு மட்டுமே தானமாக செய்கிறோம். அன்னதானத்தின்  சிறப்பே  அருந்தவம் செய்தவரும் அதில் கலந்து கொண்டு ஆசி கூறுவார்கள்.

அக்ரஹாரத்தில் உள்ள ஆயிரம் பிராமணர்களுக்கு  அன்னதானம் செய்வதால் வரும் பலனும், ஆயிரம் கோபுரங்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்வதனால் வரும்  பலனுக்கும், உண்மையினை உணர்ந்து  ஈனமில்லா பொருளதனைச் சிந்தித்து, அதன் பேருமைகளை எடுத்துக்  சொல்லும் ஞானிகளுக்கும் பெரியாருக்கும் ஒரு வேளை பகல் உணவு அளிப்பதால்  பலனுக்கு மற்ற இரண்டும் ஈடில்லை என்பதேயாம்.

மிக  எளிதாக எளிமையாக செய்யக்கூடிய அன்னதானத்திற்கு பலனும் அதிகம், சக்தியும் அதிகம், அதனால் தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகிறது. தானம் செய்பவர் வற்றாத நதியைப் போன்றவர்.

நதியானது எங்கும் நில்லாமல், அனைவருக்கும் பயன் தரும் வகையில் ஓடிக் கொண்டே இருக்கும் அது போல் தானம் செய்பவரே சிறந்த வருகிறார்.

கேட்பவனுக்கு கொடுக்கவும் வைத்தார், கொடுத்தவனுக்கு அருளும் கொடுத்தால் இறைவன்.

 “தானத்தில் சிறந்தது அன்னதானம் அழுகிறது”.

நன்றி

ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்

மேலும் படிக்க…

மனம் ஒருநிலை படுத்தல்.

 

Leave a Reply

Your email address will not be published.