வாசி யோகத்தின் தியானமும்  காயகல்பமும் 

 

வான்  வழியே பொழிகின்ற சந்திரனின் ஒளித்தாரைகள் சகஸ்ராரம் என்னும் உச்சிக் கண் வழியாக (உச்சந்தலை) சிரசில் இறங்கி ஊசி முனை நாசி வழியே அண்ணாக்கு துவாரம் வழியாக தாரைகள் வருவதால் அது அமுதமாக மாறுகிறது.

உச்சிக்கண் துடிப்பதை நாம் பார்க்கலாம்.

பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளுக்கு, உச்சிக்கண் துடிப்பதை நாம் பார்க்கலாம், நாளடைவில் சிரசு கெட்டிப்படுகிறது, தியான பயிற்சியின் மூலம் நம்  முயற்சியால் மீண்டும், (  உச்சி  கண் இளக வைக்க) துடிக்க வைக்க, முயற்சி செய்கிறோம்.

சூரிய ஒளியால் சந்திரன் ஒளி  பெறுகிறது சூரியனும், சந்திரனும் இணையும் போது அம்மாவாசை உண்டாகிறது. (தியானப் பயிற்சியில் சூரிய கலையும், சந்திர கலையும் இணையும் போது சுழிமுனை  ஆகிறது) சூரியன் அக்னியின் வடிவமாகவும்  சந்திரன் சக்தியின் வடிவமாகிறது.

சூரிய ஒளியினால், சந்திரன் ஒளி பெற்று, சந்திரனிலிருந்து வரும் ஒளித் தாரைகள், சிரசின் வழியாக  (உச்சிக்கண்) உள்ளே புகுந்து அமுதமாக மாறி மனதையும், உடலையும் தூய்மை அடையச் செய்கிறது.

இந்த உலகத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும்  சந்திர  ஒளித்  தாரைகள் மிக அவசியமாகிறது. சந்திரனுடைய ஆதிக்கமே நம் உடலைப் பற்றி உள்ளது.

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுடைய பலம் மிக அவசியம், சந்திரன் நின்ற ராசியே உடலாகிறது, லக்னமே உயிராகிறது.

சந்திரனுக்கு சோமன் என்ற பெயரும் உள்ளது, சோமனால் அளிக்கப்பட்ட ஒளித் தாரைகள்,சோமபானமாகிறது. 

அப்படிப்பட்ட அமுதத்தை தியானப் பயிற்சியில் மேன்மை அடைந்தவர்கள் அருந்துவதால் சூரிய ஒளி போன்ற தேஜஸ் உண்டாகிறது இந்த காயமும் (உடலும்) பொன் நிறமாக மாறுகிறது.

பௌர்ணமி நாட்களில் தியான பயிற்சி.

பௌர்ணமி நாட்களில் தியான பயிற்சிக்கு (தீட்சை) உபதேசம்  பெறுவதும் மிகச் சிறப்பானது. பௌர்ணமி அன்று இரவில் திறந்த வெளியில் அமர்ந்து தியான பயிற்சியை செய்வது மிகச் சிறப்பானது.

மேலும் படிக்க…..

ஏன் தியானம் செய்ய வேண்டும் ?

பௌர்ணமி அன்று சந்திரனுடைய ஒளி தாரைகள் அதிகமாக பொழிவதால், தியான உணர்வுகள் மிக துல்லியமாகிறது.

நிலவைக் காட்டி குழந்தைகளுக்கு பால் அன்னம் ஊட்டியதின்  உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனதை ஒரு நிலைப்படுத்தி, தியான பயிற்சியின் மூலம் புலன்களை நம் வசப்படுத்தும், தூய்மையான ஒவ்வொரு  மனிதனுக்கும், பிரபஞ்சத்தில் இருந்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்.

மகத்தான சக்தி சகஸ்ரார  மென்னும் உச்சிக்கண் வழியாக அந்த  மனிதனுள் செல்கிறது. இயற்கையும் தன் ரகசியங்களை அப்படிப்பட்ட மனிதனின் மூலம் வெளிப்படுகிறது.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பது சித்தர்கள் வாக்கு.

எவன் ஒருவன் வாசியோக தியான வேள்வியால் வழிபாடு  செய்கின்றானோ அவன் பிரபஞ்ச சக்தியின் மூலம், அனைத்து ரகசியங்களையும்  அறிகிறான். அமுதமும் என்னும் நீரைத் தங்கியிருப்பது  சரசு அதனால் சிரசே அமுத  கலசமாகிறது,  சக்தி  என்னும் சந்திரனால்  அளிக்கப்படும் அமுத தாரைகளால் மனித உயிருக்கு ஞானத்தையும், உடலுக்கு சக்தியையும் அளிக்கிறது.

சிரசிலிருந்து ஒழுகும் அமுத தாரைகள்.

வாசியோக தியானப் பயிற்சி மூலம் நம் சிரசிலிருந்து ஒழுகும் அமுத தாரைகள் உடலில் உள்ள ஏழு  ஆதாரங்களையும் வளப்படுத்தி ஞானத்தை அளிக்கிறது. மூலாதாரத்தில் தோன்றிய மூலக்கனலே, தியானத்தில் தோன்றும்   ஜோதியாகும், கோடி சூரியப் பிரகாசமும், பொன் நிற ஜுவாலையும்,  கண்களுக்கு இதமளிக்கும் ஒளியே ஜோதி தரிசனமாகும், இறைவன் ஜோதி ரூபமாய் காட்சி அளிக்கிறான் என்பது சித்தர்கள் வாக்கு.

கண்ணிலே  கலந்தருள்  ஜோதி என்றார் இராமலிங்க சுவாமிகள், சித்தர்கள் இரு கண்களையும், வலது சூரியன், இடது சந்திரனாக பாவனை செய்து சொல்லியிருக்கிறார்கள், வலது  நாசியில் வரும் சுவாசம் சூரிய கலை என்றும், இடது நாசியில் வரும் வாசம் சந்திர கலை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டு நாசி துவாரத்திலும் இணைந்து வருகின்ற சுவாசமே சுழிமுனை (சூரியன்- சந்திரன் இணையும் போது அம்மாவாசை) என்னும் வாசியானது, புருவ மத்தி என்னும் அம்பலத்தில்  (ஆக்ஞை)   ஆகிய ஜோதியாக தோன்றுகிறது. அதை எந்த கண்ணால்  அகத்தினுள்ளே  உள்ளே பார்க்கிறோம், உணருகிறோம், நெற்றிக் கண் என்னும்  ஆக்ஞையே, ஆக்ஞையில்  ஜோதியாய் இறைவன் காட்சி தருகிறான்.

இந்த அனுபவத்தையே வள்ளல் பெருமான் கண்ணில் கலந்தருள் ஜோதி என்றார்.

இடது கண்ணாகிய சந்திரனும்,  வலது கண்ணாகிய சூரியனும் இரு ஒளிகள்  இணைந்து ஆக்ஞையில்  நெற்றிக்கண்ணில் தெரிவதே ஜோதி.

ஜோதி தரிசனம் போன்ற ஏழு ஆதாரங்களே துணையாக  உள்ளது.மூலாதாரத்திலிருந்து, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் என ஆக்ஞை என்னும் நெற்றிக் கண்ணுக்கு மூலக் கனல் வரும் போது ஜோதியாக தோன்றுகிறது.

சந்திரன் மூலம் கிடைக்கும் சந்திர ஒளியானது, நம் சிரசில் உள்ள முடிவுகளின் மூலம் ஈர்க்கப்பட்டு, சிரசில்  உள்ள நீரை அமுதமாக மாற்றுகிறது.

ஜடா முடியும், சிரசில் கங்கையும். 

சிவன் என்றால் நம் நினைவுக்கு வரும் தோற்றமே  ஜடா முடியும், சிரசில் கங்கையும் நெற்றியில் கண்ணும் தான்.

 சிவபெருமானின் சரிபாதி உடல் இடது புறம், சக்தி என்னும் சந்திர கலையாகவும், வலது புறம் சிவன் பிங்கலை என்னும் சூரிய கலையாகவும், ஜடா முடியில் பிறை மதியும், நெற்றிக்கண் என்னும் ஆக்ஞைச் சக்கரமும், சிவபெருமானின் தோற்றமாக உருவகப்படுத்தி உள்ளார்கள்.

 இடது பக்கம் சக்தியின் பாகத்திலே சிரசிலே கங்கையை வைத்துள்ளார்கள். தானே உலகில் உவமை இல்லாத தலைவியென உமையவள்  சிவனின் ஒரு பாதி ஆனவள், மாதுளைப்  பூவின் வர்ணத்தின் உள்ளே மரகதம் ஆகிய நீங்காத பச்சை நிறத்தினுடையவள்,  அணுவுக்குள் அணுவாய்  இருப்பவள்,  நுண்ணியராய்  ஆருயிர்களுக்கு  விரும்பிய வாழ்வை  பாகத்தில் உறைபவள்  உயிருக்கு உயிராய்,  நில உலகத்தில் அனைத்தும்  படைத்தருள்பவள்  சக்தி, உமையவள்  அருளினை வேண்டுவோரின்  அகத்தினிலே நீங்காது  நிறைந்து பேரருளை அருள்கின்றவள் சக்தி.

 நெற்றிக் கண்னுடைய சிவ பெருமான், அன்பு செய்யும் ஆருயிர்களுக்கு அருள்புரிய அழிவின்றி நிற்பவன் கொன்றை மலர் கூடிய திருவைந்தெழுத்தின்  எழில்  மெய்யன் அவனை  இடைவிடாது ஒருவோரின், தூய உள்ளத்திலே  எழுந்தருள்கின்றவன் எந் நாளும் குறைவிலா திருவருளை நல்கி உலகத்தோரை உய்விப்பவன், தனக்கோர் தலைவனில்லாத தனித் தலைவன் இறைவன் சிவன்.

மண்ணகத்தே வாழும் மனிதர்களை விண்ணகத்தே உயர்த்தி. நன்னெறி தன்னை உணர்த்தும் விமலன் திருவருள் வெள்ளம் தங்கியிருக்கும் திருச்  சடையினையும் பெண் அமர்ந்திருக்கும் இடம் பாகத்தினை உடையவன் எல்லா குற்றங்களிலும்.  பாசங்களிலும் இருந்து நீங்கிய தூயோனுமாவான் என்றும் மங்காப் பேரொளியாய் உள்ளதை உள்ளவாறு உணர்த்திடும் பேரருளாளன் சிவன்.

 சிவனின் நெற்றிக் கண்ணே ஆக்ஞைச் சக்கரம், கங்கையின் இருப்பிடம்,  ஜடா முடியில் பிறைச் சந்திரன், சந்திரனின் கீழே கங்கை உள்ளது. குண்டலினி சக்தியை  உணர்த்தவே சிவனின் கழுத்தில் பாம்பு உள்ளது.

மேலும் படிக்க…..

தியானமும் உண்மையும்

இப்பொழுது யோக வழிபாட்டின் நிலைக்கு வருவோம். ஜடா முடியில் கேசத்தில் மின் சக்தி உள்ளது. பிறை மதியின் ஒளியை தேசத்தில் உள்ள மின் சக்தியினால்  ஈர்க்கப்படுகிறது.

 பிறைமதியின் ஒளியினால் உண்டாகும் அமிர்தம் கங்கையைப் போல் வற்றாதது என்பதை உணர்த்தவே சிவனார் சிரசிலே பிறை மதியும்,  மதியின் கீழே கங்கையும் இருப்பதாக உருவகப்படுத்தினார்கள், அமிர்தம் புனிதமானது, அது மனிதனை பவித்ரமாக்குகிறது,  அப்படிப்பட்ட உயர்ந்த பொருள் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காதது.

 சிவாலயங்களில் மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தின் மேல் இரண்டடி அடி உயரத்தில் அடிப்பாகம் கூர்மையாய் உள்ள  செம்பில் இருந்து நீர் சொட்டு, சொட்டாய் விழுந்து கொண்டிருக்கும் அமிர்த கலசம் என்னும் தாரா பாத்திரம் வைத்திருப்பார்கள்.

தியானத்தின் மூலம் சந்திரனுடைய ஒளி

தாரைகளை கிரகித்துக் கொள்வதினால் தான், சிரசிலிருந்து அண்ணாக்கு துவாரம் வழியாக அமுதம் ஒழுகுகிறது என்பதை உணர்த்தவே.

 சிரசில் நிறைந்த அமுதத்தினை உண்பவர் அந்தரத்தில் உலாவலாம், சிரசை நிலா மண்டபம் என்று தன் யோக பட்டியலையே சொல்கிறார் அவ்வையார்

அண்ணாக்கில் ஒரு அமுதத்தினை அருந்துவதால் விண்ணவர் தலைவன் இந்திரன் போல் இருக்கலாம்.

தியானப் பயிற்சியால் உண்டாகும் ஞானத்தின் மேன்மையை உணர்ந்து கொள்ளவும், வேதங்களில் சொல்லப்பட்டதை,  சாமான்ய மனிதனும் உணர்ந்து  கொள்ள வேண்டும் என்பதற்காக, வாசியோக தியான வழிபாட்டின் நாயகனான சிவனை உருவகப்படுத்தி உள்ளார்கள்.

புராண, இதிகாச காலங்களில் வாழ்ந்த ரிஷிகள், முனிவர்கள், தோற்றமே ஜடா முடிதான் முடியை கிரீடம் போல் சுற்றி வைத்திருப்பார்கள்.

அப்படி ஜடா முடியுடன் இருப்பதின் சிறப்பே தியான  வேள்வியால், தவத்தால், தங்கள் மனோசக்தியினை பெருக்கிக் கொள்ளவும், சந்திரனுடைய ஒளித்தாரைகள் ஈர்த்துக் கொள்ளவும் சிரசில் ஜடா முடி மிக அவசியமாகிறது.

பகீரதன்தன் தவத்தின் மேன்மையால் கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கையை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கி கொண்டார் என்று புராணம் சொல்கிறது.

மிகச் சாதாரணமாக நினைக்கும் தலை முடிக்கு, இப்படி பெரும் சிறப்பு உள்ளது. சந்திர ஒளியானது மனதைத் தூய்மை ஆக்குகிறது அப்படி மனதையும், உடலையும் பவித்ரமாக்கும். 

சந்திர ஒளியினை உடலுக்குள் இழுத்துக் கொள்ள, உதவியாக இருப்பதும், மிக முக்கியமானதும்,  சிரசில் உள்ள ஜடா முடியே  ஆகும்.

இப்படிப்பட்ட சிறப்புடைய தலை முடியைத் தான் நாம் இறைவனுக்கு காணிக்கையாக்குகிறோம். 

பெண்கள் கூந்தலை நீளமாக வளர்த்து வைத்திருப்பதால் தான் சாந்தமாகவும், அமைதியாகவும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவம் உண்டாகிறது.

இயற்கையோடு ஒன்றி வாழ பழகிக் கொண்ட நம் முன்னோர்கள் கட்டுக் குடுமியிடன் தான் இருந்தார்கள்.

சந்திரனுக்கு அதிதேவதை விஷ்ணு பகவான், விஷ்ணு பகவானின் பண்பே அமைதியாகவும், சாந்த சொரூபியாகவும் தோன்றுவது தான் இப்படிப்பட்ட பண்புகளை ஏற்படுத்துவது சந்திரனின் ஆதிக்கமே.

விஷ்ணு பகவான் பள்ளி கொண்டதை அனந்த சயனத்தில் பயணம் என்று சொல்வார்கள்.

ஆனந்தன் மேல் ஆனந்த சயனத்தில் வலது பக்கம் ஒருக்கழித்து படுத்து இருப்பதும் வலது கையை மடக்கிக் கொண்டு தன்சிரசை தாங்கிய வண்ணம், இருப்பதே அனந்த சயன திருக்கோலம்.

வாசி யோகத்தில் வாசியை (மூச்சுக்காற்றை)  வலது, இடது என மாற்றிக்கொள்வது என்பது யோகப் பயிற்சியில் உள்ளவர்கள் மிக சாதாரணமாக மாற்றிக் கொள்வார்கள்.

வலது கையை கீழே ஊன்றி வைத்திருந்தால் இடது நாசியிலும், இடது கையை கீழே ஊன்றி இருந்தால் வலது  நாசியிலும் வாசி மாறும்.

விஷ்ணு பகவான் ஆலயத்தின் நிலையைப் பார்ப்போம் வலது முழங்கையை ஊன்றியபடி  செய்திருப்பது மிக உயர்ந்த தியான யோக நிலையாகும்.

  வலது பக்கம் வலது கையை மடக்கி ஊன்றியபடி படுத்திருப்பதால் கிரகவாசி நடைபெறும் ஆனந்த சயனத்தில் இறைவன் செய்திருப்பது.

யோக நிலையாகும் சாந்த சொரூபமான விஷ்ணுபகவான் அரைக்கண் மூடிய நிலையில் சைனா தீர்ப்பது எப்பொழுதும் யோக நிலையில் இருப்பதே ஆகும்

விஷ்ணு பகவானுக்கு நீண்ட தலைமுடி உள்ளது அதனால் கேசவன் என்றும் க்ருஷி கேசவன் என்றும், விஷ்ணு பகவானுக்கு திருநாமம் உள்ளது.

நீண்ட கேசம் இருப்பதால் தான் சந்திரனுடைய ஒளித்  தாரைகளை ஈர்த்துக் கொள்கிறது.

சூரியன் தன் ஒளி கதிர்களை சந்திரன் மீது பரப்புகிறார் சந்திரன் மீது படும் ஒளிக்கதிர்கள் சந்திர ஒளி அலைகளாக மாறி பூமியின் மீது பரவுகிறது.

சந்திரனின் ஆற்றலுள்ள ஒறுத்தாரை தியானத்தின் மூலம் எடுத்துக் கொள்ள முடிகிறது

பவித்திரமான சந்திரனின் பால் போன்ற ஒளியில், பிரபஞ்ச சக்தினை கலந்து பூமியை நோக்கி சர்வமும் வியாபிக்குமாறு பரப்புகிறான்.

அப்படிப்பட்ட புனிதமான பிரபஞ்ச சக்தியினை, மனிதன் வாசியோகத் தியான பயிற்சியின் மூலம் கம்ளப்  பவித்திரம் என்னும் சிரசில் உள்ள முடிவுகளின் மூலம்  ஈர்க்கப்பட்டு அமுதமாக மாறுகிறது என்பதை ரிக் வேதம் சொல்கிறது.

நன்றி

ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்

மேலும் படிக்க…..

 தியானப் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்?

 

 

Leave a Reply

Your email address will not be published.