ஏன் தியானம் செய்ய வேண்டும் ?

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில், பிரச்சனைகளால் மனம் பாதிப்பு  அடைகிறது. தினசரி நாம் சந்திக்கும் மனிதர்களால்  வருவது,  வியாபாரம், தொழில், சக பணியாளர்கள், அலுவலக அதிகாரிகள் மூலம் உண்டாகும்  மன உளைச்சல்களை சந்திக்கும் ஒருவருடைய மனம்.

ஒரு சராசரி மனிதனின் அறிவிலிருந்து.

கோபத்தால் கொந்தளித்துப் போகும். சம்பந்தப்பட்டவரிடம் சரியான காரணங்களை, நாம் விவரித்து பேச முடியாது. அப்படி பேசி விட்டால், நம்முடைய கோபம் தணிந்து விடும். ஆனால் பேசும் வாய்ப்பை நமக்கு தராமல், சொல்வதை மட்டும் செய்தால், போதும் என்பதே பதிலாக இருக்கும்.

எந்த ஒரு செயலும், ஒருவர் நினைத்தவுடன்  செய்து விட முடியாது, எவ்வளவு உயர்ந்த கல்வி கற்று இருந்தாலும் ஒரு செயலுக்கு அதன் தன்மையை பொருத்து, கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட  குறைகள் ஒவ்வொருவரிடமும்  இருக்கும், ஒரு சராசரி மனிதனின் அறிவிலிருந்து, கல்வி கற்றவர்கள் பொது அறிவில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தன்னைச் சுற்றி அவர்களே ஒரு எல்லையை நிர்ணயம் செய்து கொண்டு, அந்த எல்லையே  உலகம் என்று வாழும், அறியாமை நிறைந்த மனம் உடையவர்களை, நம்புவது நம்மை நாமே  ஏமாளியாக்கிக்   கொள்ளும் செயலாகும்.

மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரித்திலும், குற்றம் கண்டு பிடித்து, தன்னை மற்றவர்கள் விருந்தினர்களைப்  போல் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு,

சக பணியாளர்களிடம்  மேதாவியைப்  போல் பேசுவது, மற்றவர்களையைப் பார்த்து பொறாமை படுவது, யாரும் தன்னை மதிப்பதில்லை  என்ற தாழ்வு மனப் பான்மை இவைகளையே ஆயுள் முழுவதும் முதலீடாக வைத்துக் கொண்டு, தீராத வியாதியுடன், தன்நிலை உணராமல்,  சிரமபடுத்துவது தான் இப்படிப்பட்டவர்கள் கண்ட பலன்.

மேலும் படிக்க….

மனம் ஒருநிலை படுத்தல்.

தன்னை யாரும் வந்து பார்ப்பதில்லை, வீட்டில் யாரும் கவனிப்பதில்லை, என்று புலம்புவது, தான் உடல் நலத்துடன், நன்றாக இருந்த காலத்தில், இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த நண்பர்கள், உறவினர்களைப் பார்த்து ஆறுதலாக பேசி இருப்பாரா என்றால் இல்லை. அவனவனுக்கு வந்ததை அவர்களே அனுபவித்து தீர்த்துக் கொள்ள  வேண்டும் என்றே  பேசியிருப்பார்.

எவ்வளவு சத்தியமான வார்த்தை, அதைச் சொன்னவர் உணர்வவாரா என்றால் இல்லை அடுத்தவனுக்கு மட்டுமே உபதேசம். இப்படிப்பட்ட சூழ் நிலைகளில் இருந்து மனம் விடுபட, பலவிதமான பொழுது போக்குகளை தேடிச் சென்று மனதை சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

 எப்போதெல்லாம் மனம் விரக்தி அடைகிறதோ, அல்லது எந்த ஒரு விஷயத்திற்கும்  தீர்வு கிடைக்காத மனநிலை உருவாகிறதோ, அப்போதெல்லாம் தனக்கு பிடித்த பொழுது போக்கை தொடர்ந்து நாடுகிறார்கள். ஆனால் தன் மனம் சமாதானம் அடைகிறது என்ற எண்ணத்துடன் மிகப்பெரிய தவறை செய்கிறார்கள். 

மேலும் மறக்க முடியாத பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். ஒரு தவறுக்கு தீர்வு காண இன்னொரு தவறை தவறாமல் செய்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளவர்கள், வேலைப்பளுவால் மன இறுக்கம் உள்ளவர்கள், வாசியோக தியான பயிற்சியின் மூலம் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

மகிழ்ச்சியையும், துன்பத்தையும் உணர்த்துவது மனமே.

அந்த மனதிற்கு ஆறுதலாக வெளியே பரிகாரம் தேடினால் எப்படி கிடைக்கும். இயற்கை காட்சிகளை பார்த்தால் மனம் சந்தோஷம் அடைகிறது என்றால், சந்தோஷம் இயற்கை காட்சியில் இருக்கின்றதா அல்லது மனதால் சந்தோஷத்தை உணருகிறார்களா? இன்பமும், துன்பமும் நம் மனதிலே தான் இருக்கிறது. துன்பத்தை நீக்கும் வழி முறையே வாசி யோக தியான பயிற்சி.

வாசியோக யானை பயிற்சியினால், உடல் நலம், மன நலம் சீரடையும், வெளியே கிடைக்கும் சந்தோம் சிறிது நேரத்திற்கு மட்டுமே, வாசியோகப் பயிற்சினால் வருவது என்றும் நிலையானது.

 இப்படிப்பட்ட குறைகள், தியானப் பயிற்சியினால் எப்படி நிவர்த்தியாகும்? என்ற கேள்வி மனதில் எழும், முந்நூற்று பன்னிரண்டு அடுக்குகள் கொண்ட மனிதனின் மூளையில் பார்த்ததினால் தெரிந்து கொண்ட விஷயங்கள் படித்த விஷயங்கள் காதால் கேட்டு தெரிந்து கொண்ட விஷயங்கள்.

தன் அனுபவத்தால் தெரிந்து கொண்ட விஷயங்கள், மனம் ஆராய்ந்து உணர் உணர்ந்து கொண்ட விஷயங்கள், அனைத்தும் ஒருவர் தெரிந்து கொண்ட சூழ்நிலையின் அடிப்படையில், பல பிரிவுகளாக பிரித்து, பதிவு செய்து கொள்கிறது மூளை.

பதிவு செய்யப்பட்ட எல்லா நிகழ்வுகளையும், மூளையில் இருந்து தகவல்களை நினைவுக்குக் கொண்டு வர முடியும் தகவலின்  தீவிரத்தைப் பொறுத்தே மூளையில் பதிவாகிறது.

பதிவுகளை பல வருடங்கள் கழித்தும் நினைவுக்கு  கொண்டு வரமுடியும், தகவலின்  தீவிரத்தைப் பொருத்து, எத்தனையோ வித்தியாசமான விஷயங்களையும், தகவல்களையும், மூளை பதிவு செய்து கொள்கிறது. அதற்கு உண்டான கேள்விகள் வரும் போது, மனம் மூளையில் பதிலைத் தேடும்.

மூளையில் உள்ள பதிவுகளில் தேடிய தகவல் முன் வந்து நிற்க, அதை உடனே பதிலாக சொல்கிறோம். நொடிக்கும் குறைவான நேரத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகிறது.

மனம், எண்ணம், நினைப்பு, புத்தி, என நான்கும் வெவ்வேறு நிலைகளில் செயல்படுகிறது.

நான்கும் ஒன்றல்ல மனம் பொதுவானது, எல்லா நிகழ்வுகளையும் மனம் பார்த்துக் கொண்டிருக்கும், பார்க்கப்படும் எல்லாக் காட்சிகளும் பதிவுகளாக இருக்கும் மூளையில்.

பார்க்கப்பட்ட நிகழ்வுகளை குறிப்பிட்ட ஒரு நிகழ்வை எடுத்துச் சொன்னால், அந்த நேரத்தில் நடந்த, அத்தனையும் நினைவுக்கு வந்து விடும்.

இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படத்தை பார்த்து விட்டு காட்சி வாரியாக, வாசகத்துடன், விவரித்து சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதீதமான ஆர்வத்துடன் பார்ப்பதால் மூளையில் பதிவாகிறது.

இருபது வயதுள்ள ஒருவர், நம்முடன் பழகி  நல்ல நட்புடன் இருக்கிறார்.வேலை விஷயமாக, வேறு ஊரில் தங்கிவிடுகிறார் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

பல வருடங்கள் கழித்து, மீண்டும் தன் நண்பர்களை பார்க்க வருகிறார். நண்பனைப்  என்னை தெரிகிறதா? என்று கேட்கிறார்.

மேலும் படிக்க….

தியானப் பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும்?

நண்பருக்கு மெதுவாக ஞாபகம் வருகிறது. இருபது வயதில் பார்த்த முகத்தையும், தற்போது இருக்கும் முகத்தையும் மனம் இனைத்துப் பார்க்கிறது. எண்ணம் நினைப்பால் ஒப்பிட்டுப் பார்த்து முடிவை புதித்யிடம் சேர்க்கிறது.

 அதன் பிறகே,மனம் அவளுடன் பேச, அவனைப் பற்றிய, விவரங்களை எடுத்துதருகிறது. இத்தனையும் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்து விடுகிறது. அதன் பிறகே நண்பனிடம் பேச ஆரம்பிக்கிறார்.

 நமது மூளை அதிசயத்தக்க வகையில்.

 

இதனை உணர்ந்து பார்த்தால் நமக்கு பிரமிப்பாகவே இருக்கும், இவ்வளவு சக்தி படைத்த நமது மூளையை எண்ணங்களால்  முடக்கி வைத்து விடுகிறோம்.

 தனக்குள் இருக்கும் மனக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள, வெளியே பரிகாரம் தேடுகிறார்கள், தனக்குப் பசி வந்தால், அடுத்தவன் சாப்பிடுவதை பார்த்தால், பார்த்தவன் பசி தீர்ந்து விடுமா என்ன? தனக்குள் இருக்கும் மனக் குறையை, நிவர்த்தி செய்ய மனதை, உள்நோக்கி பார்க்க வேண்டும். மனமே தீர்வுக்கான இடம், வெளியே இல்லை

 மூளையில் உள்ள பதிவுகளை, மிக மெதுவாக யோசித்துப் பார்க்க வேண்டும் நிதானமாக சிந்தித்தால், தீர்வுக்கான பதில் கிடைக்கும், மனமும் சமாதானம் அடையும்.

பிரச்சினைகளை யோசித்து பதில் கிடைக்கவில்லை என்றால் அதற்கு காரணம், சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை, சக்திமிக்க எண்ணத்தால் பதிவு செய்து விடுகிறோம்.

அதற்கு மேல்,பிரச்சினைக்கு தீர்வு இல்லை, இனி நம்மால் முடியாது என்ற ஆணித்தரமான கட்டளையிட்டு, மேலும் மேலும், கட்டளையை பலப்படுத்தி அதன் சக்தியை கூட்டிக் கொண்டே போகிறோம். இதையே பலமுறை நினைத்து அதன் சக்தியை  குறைய  விடாமல் செய்து விடுகிறோம் எண்ணத்தால். 

நினைப்பு என்பது ஒரு நல் முத்து. நாம் நினைப்பது முத்து போல் இருக்க வேண்டும். எண்ணங்கள் முத்தைப்போல் தூய்மையாக இருக்க வேண்டும்.

தூய்மையான எண்ணங்களை   உடையவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.தூய்மையான  எண்ணங்களை வாழ்க்கையில் நம்மை உயர்த்தும் 

மனம் எதை சுற்றி வந்தாலும் முடிவில் அதே இடத்திற்கு வந்துவிடும் தியானப் பயிற்சி முறையில் இதை முடிச்சு என்று சொல்லுவோம்.

எவ்வளவோ சமாதானங்கள் எடுத்துக் கூறினாலும் மறுபடியும் மரம் அதே இடத்திற்கு சென்று விடும்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளை, மன இறக்கம் என்று சொல்கிறோம். வாசியோக தியான பயிற்சியின் மூலம் நிச்சயம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

ஒரு விஷயத்தைப் பற்றி பல முறை சிந்திப்பதால் மூளைக்கு போகும் பிராண வாயு குறைந்து போகிறது.

முடிச்சு என்று சொல்லக் கூடிய தடையை நீக்கிக் கொண்டு  போகும் சக்தி குறைந்து போவதால், தடை எங்கு உள்ளதோ அதே இடத்தில் மனம் நின்று விடும்.

மூளைக்கு போகும் பிராண வாயு, குறையும் போது இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து, விடுபட முடியாது, சிந்தனை செய்யும் ஆற்றல் குறைந்து போகும்.

மனக்குழப்பம், தலைபாரம், தலைவலி உண்டாகிறது. இதனால் இரவில் தூங்க முடியாமல் மனச்சோர்வு உண்டாகிறது.

மூளையில் உண்டான தடையை நீக்க, வாசியோகம் என்னும் மூச்சிப்  பயிற்சி செய்வதனால், மூளையின் எல்லா பகுதிக்கும் பிராண வாயு சுலபமாக பயணித்து, தடைகளை நீக்கி, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மூளைக்கு தேவையான சக்தியை கொடுப்பது பிராண வாயு தான்.

பிராண வாயு ரத்தத்தில் உள்ள அணுக்களை சோர்வடையாமல், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

பிராணவாயு சரியான அளவு மூளைக்கு போகாமல் இருந்தால் இரத்தத்தில் உள்ள அணுக்கள் சரியான வேகத்தில் பயணிக்காமல், மந்தகதியாய் இயங்கும், இந்நிலையில் மனச் சோர்வு, கோபம், மனக்குழப்பம் வருகிறது.

வாசியோகப் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால்.

உடலின் சீரான ரத்த ஓட்டம் உண்டாகிறது. மனமும் அமைதியடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. மன அழுத்தம் சீராகிறது. இரத்த அழுத்தம் குறைகிறது. பிராண வாயு மூளைக்கு அதிகமாக செல்வதால், நினைவாற்றல் அதிகமாகிறது.

கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தால் தியானம் கைகூடுமா? வெறுமனே உட்கார்ந்து இருப்பது தியானமா?  தியானம் செய்தால், உடலில் நோய்கள் வராமல் இருக்குமா?  என்ற கேள்விகள் எல்லோர்  மனதிலும்  இருக்கும்.

மருந்து, மாத்திரைகள், சாப்பிட்டும் வியாதி குறைவதில்லை. மீண்டும், மீண்டும் வியாதிகள் வருகிறது, மருந்து சாப்பிடாமல் தியானம் செய்தால் மீண்டும் வியாதிகள் வராதா? என்ற பலவிதமான கேள்விகள், மனதில் வலம் வந்து கொண்டே தான் இருக்கிறது.

இதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? என்று ஒருவர் கேட்டால்,கேள்வியை கேட்பவரை மனப்பூர்வமாக என பயிற்சி செய்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

அனுபவ பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே இதைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.

தனிப்பட்ட ஒருவரின் மனநிலையைப் பொருத்தது, இதை வெளியே காட்டி உணர்த்த முடியாது. விஞ்ஞானமும்  அறிந்திராத பல விஷயங்கள்  மெய்ஞானத்தில் உள்ளது.

மெய்யாகிய உடம்பை அறிந்து கொள்வதே மெய்ஞானம். அன்றைய ரிஷிகள், முனிவர்கள், கூறிய மெய்ஞானமே இன்றைய விஞ்ஞானம்.

மெய்ஞானத்தை ஆன்மீகமாக மாற்றி சுலபமாக எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், நடைமுறை வாழ்க்கையில் முறைப் படுத்தி உள்ளார்கள்.

ரிஷிகள், முனிவர்கள், எதையும் உணர்ந்து அறிந்து கொள்ளும் மன நிலையில் யாரும் இல்லை. 

ஆன்மீக விஷயங்களை அனைத்தும் விஞ்ஞானம் தான் வேதங்களில் இல்லாத விஷயங்களே இல்லை.

அனைத்திற்கும் வேதங்களே ஆதாரம். எந்த ஒரு விஷயங்களும்   மிக எளிமையாக கிடைத்தால் அதற்கு மதிப்பு இல்லை என்பதை உணரலாம்.

நன்றி

ஆசிரியர்
வாசியோக தியானம் பீடம்
சிவயோகம் குருஜி. K.ராஜாராம்

மேலும் படிக்க….

தியான வழிபாடு சூட்சமமான ரகசியங்கள்

  

Leave a Reply

Your email address will not be published.